கோடம்பாக்கம் Corner

தமிழ் சினிமாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் (பெப்சி) ஆகிய இரண்டு சங்கங்கள் மற்ற சங்கங்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட்டு வருகின்றன.

ஆனால் பழம் தின்று கொட்டை போட்ட பழம்பெரும் தயாரிப்பாளர் சங்கமான ‘புரோடீசர்ஸ் கவுன்சில்’ என்று அழைக்கபடுவது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். இதில்தான் தாணு, கேயார் போன்றவர்கள் தயாரிப்பாளர்களாக இருந்து பல கோடிகளை ஆட்டையப் போட்டதாக குற்றசாட்டு எழுந்தது. பல வழக்குகள் நடந்தது.

இப்படி ஊழல் குற்றசாட்டுகள் மலிந்த அந்த சங்கத்தை மாற்ற வேண்டும் என்றுதான் விஷால், எஸ்.ஆர்.பிரபு போன்ற இளம் தயாரிப்பாளர்கள் போட்டியிட்டு வென்றனர். மோனோபோலியாக செயல்படும் க்யூப் டிஜிட்டல் சினிமா புரவைடர் நிறுவனம் ( இது ஏவி எம்மின் பினாமி நிறுவனம்), திருப்பூர் சுப்ரமணியம் ஏகபோக கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த விஷால் அணி முயன்றது.

ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தை வைத்து சுருட்ட நினைக்கும் ஆட்களை அந்த புதிய அணியை பதவியிலிருந்து விரட்டி அடிக்க வழக்குத் தொடர்ந்து, சங்கத்தை செயல்படவிடாமல் செய்தனர். இதனால் விஷால் அணி வெறுத்துப்போய் வெளியேறியது. அதேநேரம் இளையராஜாவின் 75-வது பிறந்த நாளுக்கு லைவ் நிகழ்ச்சி நடந்த்திய விஷால் அந்தப் பணத்தை தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளையில் சேர்த்தார்.

இந்த சமயத்தில் சுருட்ட நினைப்பவர்களின் பக்கம் நின்ற தமிழக அரசாங்கம், தயாரிப்பாளர் சங்கத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து வைத்துக்கொண்டு, வழக்கில் தீர்ப்பு வந்ததும் வேறு வழியில்லாமல் தனது ஆட்களைத் தேர்தலில் நிறுத்தி அவர்களை குறுக்கு வழியில் ஜெயிக்க வைத்துள்ளது. அதில் தலைவரானவர்தான் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி.

சொந்த நலன்களுக்காக வழக்கு

தயாரிப்பாளர் சங்கத்தில் அதிமுக அரசாங்கத்தின் நேரடித் தலையீடு வந்ததால் வேறு வழியில்லாமல், தொடர்ந்து படம் தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் ‘நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ தொடங்கினார்கள். தற்போது ‘படு முழுங்கி’ என்று திரையுலகினரால் வருணிக்கப்பட்ட இராம நாராயணனின் மகன் முரளி தலைவராக இருக்கும் பழைய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பாரதிராஜாவையும் அச்சங்கத்தில் உள்ளவர்களையும் மிரட்டி வருகிறது முரளி தலைமையிலான சங்கம்.

தயாரிப்பாளர் சங்கத்தை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துதல், சாட்டிலைட் உரிமை, பாடல்களை விற்றுக்கொடுத்தல் ஆகியவற்றில் பல கோடிகளை சுருட்ட முரளியும் அவரது குழுவினரும் திட்டமிட்டிருப்பதால், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், டி.ராஜேந்தரின் மனைவி தலைவராக இருக்கும் மற்றொரு தயாரிப்பாளர் சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களின் பதிவையும் ரத்து செய்யும்படி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்துள்ளார் ராம நாராயணனின் மகன் முரளி.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “ எங்களுடைய‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ கடந்த 40 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இதே தமிழ்த் திரையுலகத்தில் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’, ‘தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ ஆகிய இரண்டு புதியசங்கங்கள் உருவாகி இருக்கின்றன. இந்த புதுச் சங்கங்களால் தேவையில்லாமல் புதிய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு சங்கத்தின் பெயர் போன்றே இன்னொரு சங்கத்தின் பெயர் இருக்கக் கூடாது என்பது சங்கங்களின் அமைப்பு விதிகளில் ஒன்றாக இருப்பதால் மேற்கண்ட இரண்டு சங்கங்களின் பதிவையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.

நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று மேற்படி மனுவுக்கு வரும் ஏப்ரல் 8-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட இரண்டு புதிய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருகிறது. பழைய சங்கத்தில் எந்த போனியும் நடக்காமல் கல்லா கட்டமுடியாத நிலையில் நீதி மன்றம் வரைச் சென்று பொங்கல் வைத்திருப்பது தமிழ் திரையுலகத்தின் புகழுக்கு இழக்காக அமைந்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

-4தமிழ்மீடியாவுக்காக:மாதுமை

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சன் டிவி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவருடைய 65-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வீரைய்யா..!
ராசத்துடன் இந்த முற்றத்துக்கு வந்து சேர்ந்தவன்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு, சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடிக்கும் மும்மொழிப் படம், ‘அந்நியன்’ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களை இயக்க ஆயத்தமான இயக்குநர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.