கோடம்பாக்கம் Corner

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்தியமொழியத் திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது 67-வது தேசிய விருதுகள் ஆகும்.

கடந்த வருடம் கோரோனா பெருந்தொற்று காரணமாக ஒரு வருடம் தாமதமாக இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ் சினிமாவுக்கு மொத்தம் 7 விருதுகள் கிடைத்துள்ளன.

இதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘அசுரன்’ தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. அதேபோல சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷுக்கு அசுரன் படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது. இதே வெற்றிமாறன் இயக்கத்தில் வெள்ளியான ‘ஆடுகளம்’ படத்துக்காக அவர் முதல் முறை தேசிய விருது பெற்றார். தனுஷ் இந்த விருதை பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல சிறந்த குழந்தை நடிகருக்கான விருதை‘கேடி என்கிற கருப்பு துறை’ படத்துக்காக நாக விஷாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பார்த்திபன் எழுதிய இயக்கிய ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு, ஸ்பெஷல் மென்சன் ஜூரி, சிறந்த ஒலி வடிவமைப்பு (ரசூல் பூக்குட்டி) ஆகிய இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள இசைக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது டி இமானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகள் குறித்த பெரும் விவாதம் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் நடந்துவருகிறது. ஏற்கெனவே தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ரஜினியின் ஆதரவு வாக்குகளைப் பெறுவதற்காக அவரது மருமகன் தனுஷுக்கு மீண்டும் தேசிய விருதை ஆளும பாஜக அரசு கொடுத்துள்ளதாக விவாதித்து வருகின்றனர். அதேபோல தேசிய விருதுக் குழுவில் கங்கை அமரன் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அவர், விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு பரிந்துரைத்தாகவும் ஆனால் தனுஷுக்கு கொடுக்கப்பட்டுள்ளது அவருக்கே ஆச்சரியம் அளிப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் நடிகர் பார்த்திபன் தொடர்ந்து மலிவான அரசியல் மற்றும் லாபி செய்தே 2 விருதுகளைப் பெற்றுள்ளார் என்று தேசிய விருது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- 4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சன் டிவி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவருடைய 65-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வீரைய்யா..!
ராசத்துடன் இந்த முற்றத்துக்கு வந்து சேர்ந்தவன்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு, சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடிக்கும் மும்மொழிப் படம், ‘அந்நியன்’ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களை இயக்க ஆயத்தமான இயக்குநர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.