கோடம்பாக்கம் Corner

“ நான் ஜீனியர் ஆர்டிஸ்டா இருந்தப்ப எப்படி சட்டத்துணி போட்டிருந்தேனோ அப்படித்தான் இன்னமும் போட்டுக்கிறேன்.” ஃபோட்டோ ஷூட்ஸ்ல கூட நாம ரொம்ப சிறப்பா நடிக்கனும், அப்புறம் அத கண்டிப்பா சீரியஸா எடுத்துக்கனும், கண்ட விஷயத்துல கவனத்த செலுத்திட்டா அப்புறம் எதுல சாதிக்கனுமுன்னு நினைச்சோமோ அதுல கோட்ட விட்டிருவோம்.

நான் ஒரு பெரிய நடிகன மாதிரி, ஒரு சூப்பர் ஸ்டார் மாதிரி நடிச்சிருவேன். ஆனா அப்படி வாழ முடியாது. நான் கதாபாத்திரங்களை நடிக்கிறதுல மட்டும் தான் கவனம் செல்த்துறேன். மத்தபடி வாழ்க்கையில் ரொம்ப சாதாரண மனுஷன இருந்தேன் இப்பவும் இருக்கேன்.

ரொம்ப ஆடம்பரமான வாழ்க்கைய நான் ரொம்ப பத்தத்துல இருந்து பார்த்துக்கிடே இருக்கேன் அதனால தான் அந்த வாழ்க்கை எவ்வளவு போலின்னு தெரியுது, கண்டிப்பா அப்படியான ஒரு வாழ்க்கைய நான் வாழ விரும்ப மாட்டேன்.

எனக்கு கொடுக்கப்படுற கதாப்பாத்திரத்துக்கு உண்மையா இருந்து அதுக்கு உயிரூட்டுற மாதிரி ஒரு நடிப்பக் கொடுத்திட்ட போதும் வேற ஒண்ணும் வேண்டாம், பணமும் புகழும் ஒண்ணுக்கு உதவாது..

நான் சம்பாரிச்ச பணம் என்னோட தான் இருக்கும் நான் நடிச்ச பாத்திரம் மக்களோட இருக்கும். நானும் அந்த பாத்திரம் வாழ்ற வரைக்கும் வாழ்வேன். அதான் எனக்கு வேணும்.

என்னை ஒன் சீன் மாஸ்டர்ன்னு கூப்பிடுற அளவுக்கு நான் நிறைய படத்துல ஒத்த சீன்ல மட்டும் நடிச்சிருக்கேன். ஆனா அந்த ஒரு சீன்லயும் உயிர கொடுத்து நடிச்சிருக்கேன்.

வாழ்க்கையில எனக்கு வெற்றி கிடைச்சிருக்குன்னு சொன்ன அது நான் எப்படியான படம் நடிக்கனுமுன்னு விரும்புறேனோ அப்படியான படத்த தேர்வு செய்யுற உரிமைய கொடுத்திருக்கு அவ்வளவுதான்.

250க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பிளான்க் செக்க கொடுத்து கூப்பிட்டாங்க, ஆனா நான் எப்படி படம் பண்ணனுமுன்னு தீர்மானிச்சேனோ அப்படியான படங்கள மட்டுமே தேர்வு பண்ணினேன். நான் பணத்துக்காக வந்த படத்தையெல்லாம் ஒத்துக்கிட்டு இருந்தா இப்ப இருக்கிற இடத்துல இருந்திருக்க மாட்டேன்.

என் திறமைக்கு தீனி கொடுக்கிற சின்னச் சின்ன படங்களைத்தான் ஒத்துக்கிட்டேன். சம்பளம் இல்லாம சாப்பாடு இல்லாம நடிச்ச படங்கள் தான் என்ன வளர்த்து விட்டுச்சு.

நான் இப்பவும் தெருத்தெருவா அலையத்தான் விரும்புறேன். நான் நடிக்கிற கேரட்டருக்கு ஸ்டடி பண்ண நான் நிறைய சுத்த வேண்டியதா இருக்கு.. ஆனா சமீபமா என்ன எல்லாரும் அடையாளம் கண்டு பிடிச்சிடுறாங்க.. அதனால பொது இடங்களுக்கு போக முடியல.. ஆனாலும் நான் விடுறது இல்ல.. போய்க்கிட்டுத்தான் இருக்கேன்.
நான் நடிக்கிற கதாப்பாத்திரங்களுக்கு ரெபரன்ஸ் பெரும்பாலும் பொது மக்கள் தான். என்னோட இருபது வருஷ கஷ்ட வாழ்க்கையில் நான் சந்திச்ச மனிதர்கள் தான் எனக்கு இன்ஸ்பரேஷன்.

அவங்களத்தான் நான் காப்பி அடிச்சி நடிச்சிக்கிட்டு இருக்கேன். இன்னும் ஒரு பதினைஞ்சு வருஷத்துக்கான சரக்கு இருக்கு. நான் வேலையில்லாம இருந்த அத்தனை வருஷத்துலயும் செஞ்சது எல்லாம் மனிதர்களை கவனிச்சதுதான். அதுதான் என் நடிப்புக்கு சொத்து.

சினிமாவுல அப்பவும் சரி இப்பவும் சரி நடிச்சிக்கிட்டு இருக்கிற ஹீரோக்கள் முன்னால நிக்க கூட முடியாது ஆனாலும் நமக்குன்னு சில கேரக்டர் இருக்குமுள்ள அதை நம்மளத் தவிர வேற எவன் பண்ணிட முடியுமுன்னு ஒரு நம்பிக்கையில் வந்தது, இப்ப அப்படித்தான், நான் பண்ண வேண்டிய கேரக்டர என்னத் தவிர வேற யாரும் பண்ண முடியாத மாதிரி ஆக்கிட்டேன்.

நாடகம் தான் உயிரா இருந்துச்சு.. ஆனா அதுல பணம் கொஞ்சம் கூட கிடைக்கல, அதான் சினிமாவுக்கு ஓடி வந்துட்டேன்.

மூணு மணி நேரம் நடந்து போய் ஓவ்வொரு புரடக்‌ஷனா பார்த்து போட்டோவும் பயோடேட்டாவும் கொடுத்துத்துட்டு வருவோம். பேக்கிராவுண்ட் ஆர்டிஸ்டா நடிக்க கூப்பிட்டா கூட ஓடிப் போவோம். எவ்வளவு நாள் தான் பசியோட இருக்க முடியும். எங்க பார்ட்டின்னு சொன்னாலும் அழையா விருந்தாளியாப் போயிடுவோம்.

யூனியன் கார்டு இல்லாம ஜூனியர் ஆர்டிஸ்டா நடிச்சா பாதி சம்பளம் கூட கிடைக்காது. ஆனா வேற வழி இல்ல. நடிச்சிட்டு கொடுத்த காச வாங்கிட்டு வருவோம்.

இதையெல்லாம் சொன்னது..

உத்திரப்பிரதேசம் மாவட்டத்துல முஜாபர்நகர் கிராமத்துல பிறந்து கெம்ஸ்டிரி படிப்ப விட்டுட்டு நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவுல படிச்சிட்டு, மும்பைக்கு ஓடி வந்து வாட்மேன் வேலைப் பார்த்து 1999ல சர்ஃபரோஷ் திரைப்படத்துல சின்ன வேஷத்துல துவங்கி சல்மான் கான் ஷாருக் கான்ன்னு பாலிவுட் கிங் நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்து உச்சத்தில் இருக்கும் நவாஷுதின் சித்திக்...

இன்று அவருடைய வெற்றி அவருக்கு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறது. இன்னும் பருப்புச் சோறு சாப்பிட்டாலும் நல்லதொரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற பசியோடு இருக்கிறார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பேச்சிலர்’படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இதே படக்குழு, பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து நடித்துள்ள ‘போதையில் தள்ளாதே’ ரொமான்டிக் சிங்கிள் தனியிசைப் பாடலை வெளியிட்டிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா முதல் அலையின் போதும் பில் கேட்ஸின் தலை உருண்டது. அதேபோல் தற்போதைய இரண்டாம் அலையில் கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்குறார் என்று ‘இல்லுமினாட்டி, கான்பிரேசி கோட்பாடு’என்றெல்லாம் சில நெட்டிசன்கள் இணையத்தில் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை நோக்கி தன்னுடைய அனுதாபப் பார்வையைத் திருப்பியிருக்கிறது. முதல் அலைக் கொரோனா தாக்குதலை ஓரளவுக்கு சமாளித்த இந்தியா, ஐந்து மாநிலத் தேர்தல்களை நடத்துவதில் அலட்சியம், கும்பமேளா போன்ற பிரம்மாண்ட சமய நிகழ்ச்சிகள் காரணமாக இரண்டாம் அலை கோரோனா 750 வகையான மரபுதிரிபுகளோடு வேகமாக பரவி வருகிறது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.