கோடம்பாக்கம் Corner

ஒரு அசலான கலைஞனின் வெற்றி என்பது, தன்னுடைய போட்டியாளர்களை புறந்தள்ளாமல் அவர்களுடன் இணைந்தும், தன்னுடைய தனித்த பாணியாலும் தாக்குப் பிடிக்க வேண்டும் என்பதில்தான் அடங்கியிருக்கிறது.

அந்தத் தகுதி நடிகர் விவேக்கிற்கு அவரது அறிமுகப் படமான ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்துக்கு அடுத்து வந்த ‘புதுப்புது அர்த்தங்கள்’திரைப்படத்திலேயே வந்துவிட்டது. ‘காயமே இது பொய்யடா.. வெறும் காற்றடைத்த பையடா..’ என்ற பட்டினதார் தத்துவத்தை, தன்னுடைய நகைச்சுவை மொழியில் ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்று சொன்னது தமிழ்நாட்டு மக்களின் உதடுகளில் தத்துவ வாக்காக மாறிப்போனது.

விவேக்கின் சமகாலப் போட்டியாளரான வடிவேலு.. ‘உடல் மொழி, குரல் மொழி, ஒரு கிராமிய மனதின் வெள்ளந்தித்தனம் ஆகிய மூன்று அம்சங்களால் கட்டமைத்து வெற்றி பெற்றார் என்றால், தொடக்கத்தில் தோற்றக் கிண்டல், கேலி, அடல்ட் நகைச்சுவை என தன்னை வளர்த்துக் கொண்டாலும் பின்னால், தமிழக நடுத்தர வர்க்கத்தின் குரலாகவும் முகமாக மாறி, அரசியலையும் சமூகத்தையும் அட்டகாசமாக எள்ளி நகையாடிய நகைச்சுவையை கையில் எடுத்தபின் ‘சின்னக் கலைவானராக’ முடிசூட்டப்பட்டார்.

விவேக்கின் நகைச்சுவை அங்கமாக உடலும் உரையாடலும் இருக்கும் அதேநேரம், பகுத்தறிவை தொட்டுக்கொண்ட ‘டைமிங்’ எதிர்வினைகளால் புகழின் உச்சியைத் தொட்டார். தொல்காப்பியர் சொல்வதுபோல்,‘எள்ளல் இளமை பேதமை மடன் நகை நான்கு என்ப!' என நகைச்சுவை தோன்றும் இடங்களைச் சுட்டிக்காட்டுகிறார். இந்த நான்கு ஏரியாக்களிலும் ரன்களைக் குவித்தவர் விவேக்.

காமெடியனின் தோற்றம் என்பதே காண்பதற்கு சிரிப்பை வரவழைக்க வேண்டும் என்பதற்கு இன்று யோகிபாபு உதராணம் என்றால், அந்த மோசமான வழக்கத்தை உடைத்து நொறுக்கிக் காட்டியவர் விவேக். கதாநாயகனுக்கான தோற்றம், ஆடை, அலங்காரம் என கம்பீர காமடி நடிகராக வலம் வந்து
தன்னை வலிமையாக நிறுவிக் கொண்டவர்.

தன்னுடைய 12 வயது மகனை டெங்குக் காய்ச்சலுக்குப் பறிகொடுத்த போது நொறுங்கிப் போனார் விவேக். அந்த புத்திர சோகத்திலிருந்து மீண்டு, பழையபடி சினிமாவில் தனது சிம்மாசனத்தை மீட்டுக்கொண்டவர் விவேக். வடிவேலு இன்று நடிக்காவிட்டாலும் மீம்களில் தவிர்க்க முடியாதவராக ஆகிவிட்டது போன்று, விவேக்கின் நகைச்சுவை காணொளி துணுக்குகளைப் பார்க்காமல் உலகம் முழுக்க வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய இரவுகளை தூங்க வைத்ததில்லை மக்களின் கண்களில் இருந்த கண்ணீர் துடைத்து, உதட்டிலும் மனதிலும் 'நகை'யை அணிவித்த ஆண்பால் அம்மா விவேக்! புகழ்பெற்ற நகைக்கடைகளுக்கு போய் குன்றிமணி தங்கமும் வாங்க முடியாத ஏழைகளுக்கு நகை சூட்டி அழகு பார்த்தவர்!

'எப்படியிருந்த நான் இப்புடி ஆகிட்டேன்!' என்று முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ஏதோ ஒரு கணத்தில் விவேக்காக மாறிப்போகும் மாயத்தை செய்துவிட்டுப்போய் இருக்கிறார். தனுஷோடு ஒரு படத்தில் ரௌடியாக நடித்திருப்பார். உலக காமெடி கிளாசிக்குகளுள் ஒன்று. இப்படி வயது வேறுபாடு இன்றி எல்லோருடைய இதயங்களையும் பறவையின் இறகு போல் ஆக்கியவரின் இதயம் துடிக்க மறந்ததுபோனது தமிழர்களின் துரதிஷ்டம்!

ஒருவர் தனது முகநூலில் இப்படிப் பதிவிட்டிருக்கிறார்..

‘ஒரு மனிதனின் இறுதி ஊர்வலத்தில், செடிகள் வழங்கப்பட்டதும், அவர் அஞ்சலிக்காக மரங்கள் நடப்பட்டதும் இதுவே முதல்முறை. பூக்களின் தூய அமைதியில் புன்னகையோடு இருப்பீர்கள். உலகின் ஆகச்சிறந்த அஞ்சலி இதுதான். வணக்கம் விவேக்.’ என்று. உண்மைதான்.. சிம்பு சொல்வதைப்போல காற்றுக்கே சுவாசிக்க ஆக்ஸின் கொடுத்துச் சென்ற விவேக் எனும் சமூகச் செயற்பாட்டாளர் நட்டுச் சென்ற 35 லட்சம் மரங்களை மூன்றரை கோடியாகப் பெருக்குவது மட்டுமே தமிழ் நாட்டுத் தமிழர்கள் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்

-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பேச்சிலர்’படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இதே படக்குழு, பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து நடித்துள்ள ‘போதையில் தள்ளாதே’ ரொமான்டிக் சிங்கிள் தனியிசைப் பாடலை வெளியிட்டிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா முதல் அலையின் போதும் பில் கேட்ஸின் தலை உருண்டது. அதேபோல் தற்போதைய இரண்டாம் அலையில் கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்குறார் என்று ‘இல்லுமினாட்டி, கான்பிரேசி கோட்பாடு’என்றெல்லாம் சில நெட்டிசன்கள் இணையத்தில் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை நோக்கி தன்னுடைய அனுதாபப் பார்வையைத் திருப்பியிருக்கிறது. முதல் அலைக் கொரோனா தாக்குதலை ஓரளவுக்கு சமாளித்த இந்தியா, ஐந்து மாநிலத் தேர்தல்களை நடத்துவதில் அலட்சியம், கும்பமேளா போன்ற பிரம்மாண்ட சமய நிகழ்ச்சிகள் காரணமாக இரண்டாம் அலை கோரோனா 750 வகையான மரபுதிரிபுகளோடு வேகமாக பரவி வருகிறது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.