கோடம்பாக்கம் Corner

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

இந்தியாவின் குஜராத், மாகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரண்டாம் அலைக் கொரோனா வேறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. உயிரிழப்புகள் படுவேகமாக அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரும் படுக்கை வசதிகளும் இல்லாமலும் சுடுகாடுகளில் இடமில்லாமலும் இந்தியா பரிதாபமாக தத்தளித்து வருகிறது.

இந்த அவசரகால நிலைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மேற்கு வங்கத் தேர்தலில் ஓட்டுவேட்டையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் மோடி. இதை கண்டிக்கும்விதமாக நெட்டிசன்கள் #reginmodi-ஐ டிரெண்ட் செய்து வருகிறாகள்.

இதுவொருபக்கம் இருக்க, தமிழ் நடிகரான சித்தார்த், மற்ற நடிகர்களைப்போல வாய் மூடி இருக்காமல், மோடியின் தலைமையிலான அரசுடைய சுகாதரத்துரை அமைச்சரை ட்விட்டரில் துணிந்து விமர்சனம் செய்திருக்கிறார். முன்னதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டில் பரவிவரும் கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அந்த கடிதத்திற்கு தமது ட்விட்டர் பக்கம் மூலம் பதிலளித்த டாக்டர் ஹர்ஷ்வர்த்தன், "இம்மாதிரி அசாதாரணமான தருணங்களில் நீங்கள் அளிக்கும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பையும் மதிப்புமிக்க அறிவுரைகளையும் உங்களுடைய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பின்பற்றினால், வரலாறு உங்களை இன்னும் மேம்பட்ட இடத்தில் வைத்திருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவரது பதில் கடிதம் முழுக்க, முழுக்க காங்கிரஸ் தலைவர்களைக் குற்றம்சாட்டும் வகையிலேயே அமைந்திருந்தது.

இந்த விவகாரத்தில் ஹர்ஷ் வர்தன் பதிலை குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் தமது ட்விட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவில்: ‘நீங்கள் கோவிட் போராளி அல்ல டாக்டர் ஹர்ஷ்வர்தன். உண்மையில் நீங்கள் கோவிட்டின் கூட்டாளி’ என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் தன்னுடைய பதிவில், "எப்படியாவது தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்பதற்காக எல்லா விலையையும் கொடுத்து மக்களை கொலை செய்கிறீர்கள். அதன் பிறகு, மத கூட்டங்களில் மேலும் பலரைத் திரளச் செய்து மேலும் மக்களைக் கொல்கிறீர்கள். வரலாறு இதை ஒருபோதும் மறக்காது. மன்னிக்காது, வெட்கம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார் சித்தார்த்.

சித்தார்த்தின் இந்தப் பதிவுக்கு பாலிவுட் பிரபலங்களின் ட்விட்டர் முகவரியை டேக் செய்து, ‘சித்தார்த்தைப் போல முதுகெலும்பு உடையவர்களாக இருங்கள்’ என்று நெட்டிசன்கள் குமுறி வருகிறார்கள்.

-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

 

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பேச்சிலர்’படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இதே படக்குழு, பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து நடித்துள்ள ‘போதையில் தள்ளாதே’ ரொமான்டிக் சிங்கிள் தனியிசைப் பாடலை வெளியிட்டிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா முதல் அலையின் போதும் பில் கேட்ஸின் தலை உருண்டது. அதேபோல் தற்போதைய இரண்டாம் அலையில் கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்குறார் என்று ‘இல்லுமினாட்டி, கான்பிரேசி கோட்பாடு’என்றெல்லாம் சில நெட்டிசன்கள் இணையத்தில் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை நோக்கி தன்னுடைய அனுதாபப் பார்வையைத் திருப்பியிருக்கிறது. முதல் அலைக் கொரோனா தாக்குதலை ஓரளவுக்கு சமாளித்த இந்தியா, ஐந்து மாநிலத் தேர்தல்களை நடத்துவதில் அலட்சியம், கும்பமேளா போன்ற பிரம்மாண்ட சமய நிகழ்ச்சிகள் காரணமாக இரண்டாம் அலை கோரோனா 750 வகையான மரபுதிரிபுகளோடு வேகமாக பரவி வருகிறது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.