கோடம்பாக்கம் Corner

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மீது தமிழ்த் திரையுலகினர் இரண்டு விஷயங்களில் கோபமாக இருக்கிறார்கள். லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம், படப்பிடிப்பில் நடந்த விபத்து காரணமாக அப்படியே நிற்கிறது.

லைகா நிறுவனத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்தியன் 2 படத்தை அப்படியே பாதியில் விட்டு விட்டு, பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தையும் ரன்வீர் சிங் நடிப்பில் இந்தியில் உருவாக இருக்கும் அந்நியன் படத்தின் ரீமேக்கையும் இயக்குவதற்கான முதல் கட்ட வேலைகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

இதனால் நொந்துபோன லைகா நிறுவனம் நீதிமன்றத்துக்குச் சென்றது. லைகா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ‘நாங்கள் இதுவரை இந்தியன் 2 படத்திற்கு 250 கோடிக்கு மேல் செலவு செய்து விட்டோம். இயக்குநர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க ஒப்புக்கொண்டு முன்தொகையும் கொடுத்துள்ளோம். ஆனால் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல், வேறு சில பட வேலைகளைச் செய்து வருவது வேதனையாக உள்ளது. அவர் இந்தியன் 2 பட வேலைகளை முழுவதும் முடித்துக்கொடுக்காமல் வேறு படங்களை இயக்க செல்லக்கூடாது’என்று கோரியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை பெருநகர நீதிமன்றம், இயக்குனர் சங்கரிடம் இதற்கான பதிலை கேட்டது. நீதிமன்றத்துக்கு சங்கர் அளித்துள்ள பதிலில்‘லைகா குறித்தும், விபத்து குறித்தும் பல குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாகத் தெரிகிறது.’ ஆனால், விபத்தில் இறந்தவர்களுக்கு 10 கோடி ரூபாய் வரையிலும் லைகா இழப்பீடு வழங்கி தனது பொறுப்பைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. நீங்கள் அவ்வாறு இல்லையே என நீதிபதி தரப்பில் கேட்க, இறுதியில் இந்தியன் 2 இருந்து நழுவி செல்ல முடியாது எனத் தெரிய வந்ததால் அக்டோபர் மாதத்திற்குள் படத்தை முடித்துக் கொடுப்பதாக நீதிமன்றத்தில் ஷங்கர் பதில் தாக்கல் செய்திருக்கிறாராம்.

இது ஒருபுறம்இருக்க ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்து வந்த ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’படம் பாதியில் அப்படியே நிற்கிறது. சம்பளப் பிரச்சினை காரணமாக வடிவேலு நடிக்க மறுத்துவிட்டார். வடிவேலுவை அழத்து பலமுறை பஞ்சாயத்து பேசியும் பலனில்லாமல் போய்விட்டது. இதனால் ஷங்கர் தனது செல்வாக்கை பயன்படுத்தி வடிவேலுவுக்கு திரையுலகில் ரெட் கார்டு போட வைத்து விட்டார். இதனால் கடந்த 10 வருடங்களாக வடிவேலு எந்த படத்திலும் நடிக்க முடியவில்லை. பின்னர், கமல்ஹாசனை வைத்து வடிவேலுவிடம் சங்கர் பஞ்சாயத்துப் பேசி இருந்ததாக தகவல்கள் கசிந்தன. ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால், இந்த விவகாரத்தில் வடிவேலு மீது ஷங்கர் நடந்துகொண்ட அணுகுமுறை கோலிவுட்டில் பலருக்கும் அதிருப்தியில் தள்ளியிருக்கிறது.

இந்த நேரத்தில் தான் இப்போது இந்தியன்-2 விவகாரம் வெடித்துள்ளது. இந்தியன்-2 படத்துக்கு 256 கொடி இதுவரை செலவு என்பதைத்தான் அந்தப் படம் பாதியில் நின்றதால் செலவழித்த தொகைக்கு லைக்கா இதுவரை 250 கோடி ரூபாய் வட்டி மட்டுமே கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. நிலைமை இப்படியிருக்க இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்திற்கு போகலாமா என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் லைகாவிற்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர். இதனால் தற்போது சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் நடிக்கும் படம், ரன்வீர் சிங் நடிக்கும் அந்நியன் இந்தி ரீமேக் ஆகிய படங்களை விட்டுவட்டு இரண்டு பட வேலைகளுக்கும் வேறு வழியில்லாமல் ஷங்கர் திரும்பி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியன் 2 படத்தில் கமலுடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார் விவேக். ஆனால் விவேக் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறொரு நகைச்சுவை நடிகரை வைத்து படத்தை தொடர நினைக்கிறாராம் ஷங்கர். இதற்காக யோகிபாபுவிடம் பேசும்படி லைகாவிடம் தெரிவித்ததாகவும் செலவழித்த காட்சிகளை திரும்ப எடுக்க வேண்டாம் என்று லைகா வேண்டிக் கேட்டுகொண்டதாகவும் நம்பகமான லைகா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஷங்கர், விவேக் காட்சிகளை வெட்டியெறிவது இயக்குநரின் முடிவு, அதில் நீங்கள் தலையிடக் கூடாது என்று மல்லுக்கு நிற்பதாக தகவல் கிடைத்துள்ளது.

-4தமிழ்மீடியாவுக்காக:மாதுமை

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சன் டிவி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவருடைய 65-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வீரைய்யா..!
ராசத்துடன் இந்த முற்றத்துக்கு வந்து சேர்ந்தவன்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு, சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடிக்கும் மும்மொழிப் படம், ‘அந்நியன்’ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களை இயக்க ஆயத்தமான இயக்குநர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.