கோடம்பாக்கம் Corner

ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை நோக்கி தன்னுடைய அனுதாபப் பார்வையைத் திருப்பியிருக்கிறது. முதல் அலைக் கொரோனா தாக்குதலை ஓரளவுக்கு சமாளித்த இந்தியா, ஐந்து மாநிலத் தேர்தல்களை நடத்துவதில் அலட்சியம், கும்பமேளா போன்ற பிரம்மாண்ட சமய நிகழ்ச்சிகள் காரணமாக இரண்டாம் அலை கோரோனா 750 வகையான மரபுதிரிபுகளோடு வேகமாக பரவி வருகிறது.

இதனால், இளம் வயதினரும் கூட அதிகமாகப் பாதிக்கப்பட்டு நுரையிரல் செயல்திறன் இழப்பினால் உயிரிழந்து வருகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி இன்மை போன்ற காரணங்களால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். உரிய நேரத்தில் உயரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் அல்லாடும் குடிமக்கள் பலருக்கும் தன்னார்வாலர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தாமாகவே முன் வந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இப்படி உதவி வருபவர்களில் நடிகர்களும் அடக்கம். கர்நாடக மாநிலத்தில் தற்போது முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பிரபல கன்னட நடிகர் அர்ஜுன் கவுடா தாமே முன்வந்து கரோனா களப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். ‘புராஜக்ட் ஸ்மைல்’ எனும் அமைப்பை உருவாக்கியுள்ள அவர், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை வழங்கி மருத்துவப் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஒரு மாதமாக தேவைப்படும்போதெல்லாம் ஆம்புலன்சை அவரும் ஓட்டி சென்று நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறவர்களை வீட்டுக்கு அழைத்து வருவது, கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை இறுதிச்சடங்கு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வது என களமாடி வருகிறார். நடிகர் அர்ஜுன் கவுடாவின் இந்தச் சேவையை கர்நாடக மாநில மக்கள் பாராட்டி வருகின்றனர். இவரது நடிப்பில் வெளியான யுவரத்னா, ரஷ்டம் ஆகிய படங்கள் வெற்றி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சன் டிவி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவருடைய 65-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வீரைய்யா..!
ராசத்துடன் இந்த முற்றத்துக்கு வந்து சேர்ந்தவன்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு, சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடிக்கும் மும்மொழிப் படம், ‘அந்நியன்’ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களை இயக்க ஆயத்தமான இயக்குநர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.