யூடியூப் கோர்னர்

தமிழ் சினிமாவில் திருநங்கைகளை மையப்படுத்தி அவ்வபோது சில படங்கள் வெளிவருவதுண்டு. சில ஆண்டுகளுக்குமுன் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இப்போது திருநங்கைகள் தினத்துக்காக ஒரு பாடல் உருவாகியுள்ளது.

சமூகத்தில் தாங்கள் செய்யாத குற்றத்திற்காக ஏளனப் பார்வை, தீண்டாமை என்னும் தண்டனை அனுபவித்து வரும் பாவப்பட ஜீவன்கள் திருநங்கைகள்தான். எனவே, அவர்களின் சமூகப் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் நாளை ‘திருநங்கையர் நாள்’ எனக் கொண்டாட தமிழக அரசு மார்ச் 11, 2011 அன்று அரசாணை பிறப்பித்தது.

திருநங்கைகள் தினத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை இசையமைப்பாளர் டி.இமானால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகர் திருமூர்த்தி உருக்கமான குரலில் பாடியுள்ளார். இவர் செவ்வந்தியே மதுவந்தியே பாடல்மூலம் உலக புகழ் பெற்றவர். கொரொனா பரவலால் பாடகர் திருமூர்த்தி சென்னை வர இயலாத சூழலில் இசையமைப்பாளர் ஷாஜகான் அவரது சொந்த ஊரான ஊத்தங்கரைக்கே சென்று ஒலிப்பது செய்துள்ளார்.

‘பாலு தயிரு மோரு எல்லாம் திரிதல் தானுங்க- இந்த பாலினத்தின் திரிதலுல தப்பு இல்லிங்க’, ‘பொதுமறையில இருக்கு மூனு பாலுங்க- அதே பொதுவெளியில இருந்தா என்ன குத்தங்க’என்பது போன்ற தெறிக்கும் வரிகளில் கவனம் ஈர்க்கிறார் பாடலாசிரியர் செந்தமிழ். “திருநங்கைகள் குறித்து பாக்யா வார இதழில் சிறுகதை எழுதினேன்.அதைப் படித்துவிட்டு இயக்குநர் கே.பாக்யராஜ் அதன் கதையமைப்பை பாராட்டினார். சிறுகதை ரீச்சை விட பாடல்வடிவமாக வெளிவந்தால் அதிகமாக மக்களிடம் சென்றடையும் என்று அவர் தெரிவித்த கருத்து தான் இந்த பாடல் உருவாக அடித்தளம் என்கிறார் பாடலாசிரியர் செந்தமிழ்.

ஜெய் நடிக்கும் எண்ணித்துணிக, கிஷோர் நடிக்கும் ரூஸ்டர், மோசமான கூட்டம் போன்ற படங்களில் பாடல்கள் எழுதி வரும் செந்தமிழின் படைப்புகள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர்கள் ‘க/பெ ரணசிங்கம்’ விருமாண்டி, இ.வி கணேஷ்பாபு, ரூஸ்டர் ராம் GV, மோசமான கூட்டம் முனியப்ப குமார், டூ ஶ்ரீராம், தம்பிகோட்டை ராகேஷ், எண்ணித்துணிக தயாரிப்பாளர் சுரேஷ், தொகுப்பாளினி டோஷிலா மற்றும் திருநங்கைகள் நலச்சங்க தலைவர் உட்பட ஏராளமான பிரமுகர்கள் இந்தப் பாடலை வெளியிட்டுள்ளனர். சமீபத்தில் வெளியான மூத்த குடிகள் பற்றிய ‘எஞ்சாய் - எஞ்சாமி’ தனிப்பாடல் போல, ‘இலக்கணப்பிழை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தனிப்பாடலும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பேச்சிலர்’படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இதே படக்குழு, பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து நடித்துள்ள ‘போதையில் தள்ளாதே’ ரொமான்டிக் சிங்கிள் தனியிசைப் பாடலை வெளியிட்டிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா முதல் அலையின் போதும் பில் கேட்ஸின் தலை உருண்டது. அதேபோல் தற்போதைய இரண்டாம் அலையில் கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்குறார் என்று ‘இல்லுமினாட்டி, கான்பிரேசி கோட்பாடு’என்றெல்லாம் சில நெட்டிசன்கள் இணையத்தில் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை நோக்கி தன்னுடைய அனுதாபப் பார்வையைத் திருப்பியிருக்கிறது. முதல் அலைக் கொரோனா தாக்குதலை ஓரளவுக்கு சமாளித்த இந்தியா, ஐந்து மாநிலத் தேர்தல்களை நடத்துவதில் அலட்சியம், கும்பமேளா போன்ற பிரம்மாண்ட சமய நிகழ்ச்சிகள் காரணமாக இரண்டாம் அலை கோரோனா 750 வகையான மரபுதிரிபுகளோடு வேகமாக பரவி வருகிறது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.