கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மண்டபத்தில் ஒரு நடன அரங்கேற்றம் இடம்பெற்றது. இதன்போது மண்டபத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடமெல்லாம் படைவீரர்கள் காணப்பட்டார்கள். ஏன் என்று விசாரித்தபோது தெரியவந்தது அந்த வைபவத்தில் படை உயரதிகாரிகளும் பங்குபற்றுகிறார்கள் என்பது. அந்த நடன அரங்கேற்றம் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் கீழ் இயங்கும் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த பிள்ளைகள் உடையது. மகாதேவா ஆச்சிரமத்தில் படைத்தரப்பினர் பல்வேறு வழிகளிலும் உதவி வருகிறார்கள் என்றும் எனவே அந்த நடன அரங்கேற்றத்தில் அவர்களும் அழைக்கப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. 

Read more: தான தர்ம அரசியல்? (நிலாந்தன்)

பெரியார் முன்னால், அவரை எதிர்த்து அல்லது மறுத்துப் பேசியவர்கள் பிராமணத் தலைவர்களில் ஒருசிலர் மட்டுமே. ஆனால், பிராமணர் அல்லாத ஒருவர் பெரியாரின் கொள்கைக்கும் கருத்துகளுக்கும், அவர் முன்னிலையிலேயே மறுப்பும் எதிர்ப்பும் தெரிவித்தவர் என்றால் அவர் ஞானபீடப் பரிசுபெற்ற மாபெரும் எழுத்தாளுமை ஜெயகாந்தன் மட்டுமே. 61 ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் நடந்த தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டுக்கு ஈ.வே.ரா.பெரியார் தலைமை வகித்துப் பேசியபோது ‘மூடத்தனங்கள் நிறைந்த புராண, இதிகாசங்களை இன்றைய எழுத்தாளர்கள் ஏன் எதிர்ப்பதில்லை?’ என்று கேள்வி எழுப்பி அவர்களைச் சாடினார். அதற்கு தனது உரையில் பெரியாரை மேடையில் வைத்துக்கொண்டே அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சாத்வீகமான பதிலை அளித்தார் ஜெயகாந்தன். அப்படி அவர் என்ன பேசினார்... அதை அவரே எழுதியிருக்கிறார். ‘பெரியார் பற்றிய நடப்பு உரையாடலின் தொடர்ச்சிகளில் ஒன்றாக 4தமிழ் மீடியா வாசகர்களுக்காக அதை இங்கே மீள் பிரசுரிக்கிறோம். - 4தமிழ்மீடியா குழுமம்

Read more: பெரியாரை எதிர்த்துப் பேசிய ஜெயகாந்தன் : இன்னும் சூடாக இருக்கும் வரலாறு !

யாழ். மாநகர சபை அமர்வுகளில் சில ‘கௌரவ’ உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம் அருவருப்பை ஊட்டுகின்றன. எந்தவித பொறுப்புணர்வும் இன்றி சாதி, மத ரீதியாவும், பிறப்பினை சந்தேகத்துக்கு உள்ளாக்கியும் கௌரவ உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். அதனை ஓர் அரசியல் நிலைப்பாடாகவே கொண்டு நடக்கவும் தலைப்படுகிறார்கள். அரசியல் அறிவும், அரசியல் ஒழுக்கமும் அற்ற நபர்களை அரசியல் கட்சிகள் மக்களிடம் ஆளுமைகளாக முன்னிறுத்தும் போது, ஏற்படுகின்ற அபத்தம் இது. 

Read more: தமிழ்த் தேசிய அரசியலை சீரழிக்கும் சாதிய- மதவாத அழுக்கு! (புருஜோத்தமன் தங்கமயில்)

அனைவருக்கும் மற்றுமொரு தேர்தல் வருட வாழ்த்துக்கள். ஆம், இன்று பிறந்திருக்கும் 2020, பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் என இரண்டு தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப்போகின்றது. மக்களின் அத்தியாவசிய தேவைகள், நாட்டின் சமாதானம், சௌபாக்யம் குறித்தெல்லாம் அக்கறை கொள்வதற்கான வாய்ப்புக்களை சூடுபிடிக்கப்போகும் தேர்தல்களுக்கான களம் அனுமதிக்கப் போவதில்லை. ஊடகங்கள் தொடங்கி அனைத்து பொதுத் தொடர்பு சாதனங்களும் தேர்தல்களைப் பற்றியே பேசப்போகின்றன. 

Read more: புதிய ஆண்டில் ராஜபக்ஷக்களை எதிர்கொள்தல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

பொதுத் தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படாத நிலையிலும், பொதுத் தேர்தலுக்கான அரங்கு நாடு பூராவும் களைகட்டத் தொடங்கிவிட்டது. கூட்டணிப் பேச்சுக்கள், வேட்பாளர் தெரிவு இழுபறிகள், சமூக ஊடகங்களில் சண்டை சச்சரவுகள் என்று ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புக்கள் அடங்குவதற்குள் மீண்டும் தேர்தல் பரபரப்புக் காட்சிகள். அதுவும், தென் இலங்கையைக் காட்டிலும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், பொதுத் தேர்தலுக்கான பரபரப்பு என்பது, முற்கூட்டியே ஆரம்பித்துவிட்டது. 

Read more: பொதுத் தேர்தலை நோக்கிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வு! (புருஜோத்தமன் தங்கமயில்)

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒருசில வாரங்களுக்கு முன்னர், தமிழ்ப் பரப்பில் தொடர்ச்சியாக எழுதி வரும் சிரேஷ்ட அரசியல் பத்தியாளர்கள் சிலர், யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்தார்கள். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தங்களுக்குள் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு, அதை நோக்கிய கருத்துருவாக்கத்தை செய்வதே, அந்த ஒன்றுகூடலின் நோக்கமாக இருந்தது. 

Read more: தமிழர் அரசியலில் ‘கருத்து’ உருவாக்கிகளின் வகிபாகம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

நாட்டில் இப்பொழுது பாதுகாப்புச் செயலர் உண்டு. ஒரு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உண்டு. ஆனால் பாதுகாப்பு அமைச்சர் இல்லை. ஒரு பாதுகாப்பு அமைச்சரை ஏன் நியமிக்க முடியவில்லை? ஏனென்றால் 19வது திருத்தத்தின்படி ஜனாதிபதி அவ்வாறான அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது. எனவே தனக்கு நம்பிக்கையான ஒருவரை ராஜாங்க அமைச்சராக நியமித்து விட்டு மற்றொருவரை அந்த அமைச்சின் செயலாளராக நியமித்து விட்டு மறைமுகமாக அந்த அமைச்சை புதிய ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். 

Read more: ஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜ.நா. தீர்மானத்தை எதிர்த்தல்! (நிலாந்தன்)

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்