ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள். அவள் அனுங்கலில் கேட்டது
“வேம்பி..!”
ஆனால் அதை முகுந்தன் கேட்டனில்லை. ராசத்தின் அனுங்கலும் அழைப்பும் எனக்கு மட்டுமே கேட்டது. என் பிறப்பு முதலான பந்தத்தின் பாசக்குரல் அது. அவளுக்கும் எனக்குமான அந்தரங்கத்தின் அழுகை, சிரிப்பு, என எதுவேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அது இப்போது அறையொன்றில் சிறைப்பட்டுக்கிடக்கிறது. நான் மரமாக நிற்கின்றேன். இவ்வாறு நிற்பதற்காக நான் நொந்து கொள்ளாத நிலையினில் என் மீதான நேசிப்பினை தந்து உயிர்ப்பித்தவள் ராசம்.
என்னருகில், என் பார்வைக்குள் ராசம் இல்லாது போகும் தருணங்களில், உணர்விழந்து மரமாகிப் போகின்றேன்.
இதற்கு முன்னமும் இது போல் நான் மரமாகிப் போனதை உணர்ந்து கொண்ட தருணங்களும், வலியனுப்பவித்த துயரங்களும் உள்ளன.
"என்னது மரங்களுக்கு வலிக்குமா...? " என்று கேட்கத் தோன்றுகிறதா?
"எனக்கு வலித்தது, இன்னமும் வலிக்கிறது..."
நீங்கள் அதை முழுமையாக உணர்ந்து கொள்ள தொடரின் முதல் பகுதியில் இருந்து தொடர்ச்சியாக ஒரு தடவை வாசித்துவிடுங்கள்.
சில தினங்கள் " வேம்பி.." என அனுங்கும் ராசத்திற்கு ஆதரவாக இருந்துவிட்டு வருகின்றேன்....
(இணைப்புக்களின் மேல் அழுத்தி முன்னைய பகுதிகளை வாசிக்கலாம்.)
அடுத்த வாரத்தில் மிகுதியைத் தொடர்வோம் ..!
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்