Top Stories

Grid List

முள்ளிவாய்க்கால் இன அழிப்புக் களத்தில் ஓடிய செங்குருதியின் நெடி பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட மூர்ச்சையடைய வைக்கிறது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவர் அரசியலமைப்புக்கு புறம்பாக நியமித்துள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தினரும் நாட்டு மக்களை நாளுக்கு நாள் பைத்தியக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் இரண்டு தடவைகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை 120க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதனை, அறிவித்து சபாநாயகர் கரு ஜயசூரிய எழுதிய கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. 

தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தேர்ந்தெடுத்த ‘சமூக நீதி’க்கான இடர்நிறைந்த பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த கலைஞர் மு.கருணாநிதி, தான் மறைந்த பின்னும் போராட்டத்தின் வழியே தனக்கான உரிமையை மீட்டிருக்கின்றார். அதாவது, மெரீனா கடற்கரையில் அண்ணாவின் அரவணைப்பில் மீளாத்துயில் கொள்ள வேண்டும் என்கிற தன்னுடைய இறுதி ஆசைக்காக அவர் சட்டப் போராட்டம் நடத்தி வென்றிருக்கிறார். இப்போது, அவர் அண்ணாவின் அரவணைப்பில் அமைதியாக உறங்குவார். 

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக பா.டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கான இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்திருக்கின்றது. 

Top Stories

Grid List

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“பண்டாரநாயக்க மற்றும் பிரேமதாசக்களுக்கு இடையே மிக நெருக்கமான இறுக்கமான பிணைப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இது எமது நாட்டின் முன்னேற்றத்திற்கு இது நல்ல சகுணமாகும்.” என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

“எனக்கு எதிராக முன்னெடுத்துவரும் சேறுபூசும் நடவடிக்கைகளைக் கண்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“ராஜபக்ஷக்கள் ஆட்சியிலிருந்த பத்து வருடத்தில் அவர்கள் புரிந்த அட்டூழியங்களை யாரும் மறந்துவிடாதீர்கள். எனவே, ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி அரசியல் பயணத்தை தொடர்வதற்கு எமது சமூகம் சஜித் பிரேமதாசவிற்கு எமது பெறுமதியான வாக்குகளை வழங்க முன்வர வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

மராட்டிய சட்டசபைக்கான தேர்தல் அன்மையில் நடந்திருந்தது. 288 தொகுதி உறுப்பினர்களுக்காக நடந்த தேர்தலில் போட்டியிட்ட எந்தக் கட்சியும், அறுதிப் பெரும்பாண்மை பெற்றிருக்கவில்லை.

இந்திய மத்திய உள்துறை அமைச்சகம், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையுத்தரவை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்திருந்தது.

இந்திய சுவிஸ் அரசுகளின் உடன்பாட்டில், சுவிஸ் வங்கிகளில் பணவைப்புச் செய்தவர்களின் விபரங்களை சுவிஸ் அரசு வெளியிட்டது. இவ்வாறு வெளியிடப்பட்ட கணக்குகளில் சில நீண்டகாலமாகச் செயற்பாடின்றி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தேர்தல் குறித்த செயற்பாடுகளில் சிறப்பான சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டவர் எனப் பலராலும் பாராட்டப்பெற்ற,முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மறைந்தார்.

பச்சை வீட்டு விளைவு வாயுவால் ஏற்பட்ட கால நிலை மாற்ற அனர்த்தங்களால், 1998 முதல் 2017 வரை, ஒவ்வொரு வருடமும் சராசரியாக 16 000 பொது மக்கள் G20 நாடுகளுக்குள் கொல்லப் பட்டும் கிட்டத்தட்ட 142 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பொருளாதார இழப்பு இந்த அமைப்பைச் சேர்ந்த நாடுகளில் மாத்திரம் ஏற்பட்டும் உள்ளதாகக் கணிக்கப் பட்டுள்ளது.

ஹாங்காங் போராட்டத்தில் கடந்த வாரம் மாணவர் ஒருவர் உயிரிழந்திருந்தார். இதைக் கண்டித்து சாய் வான் ஹோ நகரில் மோசமான போராட்டங்கள் வெடித்துள்ளன.

நவம்பர் 9 ஆம் திகதி அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் இராமர் கோயில் கட்டலாம் என வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்வு இந்தியாவில் வெளியானது.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ வெகு வேகமாகப் பரவி வருவதால், அதை இயற்கைப் பேரிடராக அறிவித்து, அவசரகாலச் செயற்பாடுகளை, அவுஸ்திரேலிய அரசு முடுக்கி விட்டுள்ளது. நியூ சவூத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மாகாணங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ, மக்கள் வதிவிடங்களை நோக்கிப் பரவியதால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிலர் பலியானதாகவும், பலர் காயமுற்றிருப்பதாகவும் அறிக்கப்பட்டுள்ளது.

Top Stories

Grid List

இன்று ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்வருடத்துக்கான ஐசிசி உலகக் கிண்ணக் கோப்பைப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்றிருந்த நிலையில் சூப்பர் ஓவர் வழங்கப் பட்டு அதிலும் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்ற நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை மழை காரணமாக இடை நிறுத்தப் பட்டு இன்று புதன்கிழமை மீண்டும் ஆரம்பமான இந்திய நியூசிலாந்து அணிகளுக்கான அரையிறுதிப் போட்டியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.

சனிக்கிழமை இங்கிலாந்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியை இந்தியா அணி 7 விக்கெட்டுக்களாலும் அவுஸ்திரேலிய அணியைத் தென்னாப்பிரிக்க அணி 10 ரன்களாலும் வெற்றி கொண்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை எட்ஜ்பஸ்டொன் மைதானத்தில் இந்திய வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை இந்தியா 28 ரன்களால் வெற்றி கொண்டுள்ளது.

ஹிட்டு பட இயக்குனர்களுக்குதான் தட்டு நிறைய இனிப்பு! ஒருவர் ஜெயித்தால் போதும். அவரை ரவுண்டு கட்டி புக் பண்ண கிளம்பிவிடுவார்கள்.

சாதாரண சாமானியர்கள் நினைத்தால்தான் நடக்காது. ஆனால் விஜய் மாதிரி பெரிய மனிதர்கள் நினைப்பதும் கூட நடக்கவில்லையே?

பொங்கல் வெளியீடு என்ற அறிவிப்போடு தொடங்கப்பட்ட படம் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 'தர்பார்'.

டிசம்பர் வெளியீடாக வருவதாக இருந்த சூர்யாவின் 'சூரரை போற்றுவோம்' இப்போது வராது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவில் இந்த ஆண்டிற்கான, சிறந்த முழுநீளத் திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை விருதினை (Golden Leopard), Pedro Costa இயக்கிய போர்த்துக்கல் திரைப்படமான Vitalina Varela எனும் திரைப்படம் வெற்றி கொண்டது

புகழ்பெற்ற காற்பந்து வீரர் டியோகோ மரடோனாவை பற்றி ஒரு ஆவணத் திரைப்படம். லொகார்னோ திரைப்பட விழாவில் பியாற்சே கிராண்டே திறந்த வெளித் திரையரங்கை அப்படியே 80,90 களின்  காற்பந்து மைதானமாக மாற்றிச் சென்றது.

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது கௌரவிக்கப்பட்டவர் சுவிற்சர்லாந்தின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான Fredi M.Murer.

லோகார்னோ பியாற்சா கிரான்டே பெருந்திரையில் காண்பிக்கப்பட்ட படங்களில் பெரும் ஆர்வத்தினையும், எதிர்பார்ப்பினையும் தூண்டிய படங்களில் ஒன்றாக இருந்தது " கமிலே" (Camille). ஆயுதங்களின் அகோரப் பசிக்கு, சொற்ப வயதில் பலியாகிப்போன ஒரு இளம் பெண் Camille Lepage வாழ்வு தழுவிய உண்மைக் கதையது.

கதவே இல்லாத எலிப்பொறியில், பல்லே இல்லாத எலி சிக்கிய மாதிரி செல்வராகவனின் ஃபேட் அவுட் காலத்தில் அவரிடம் சிக்கியிருக்கிறார் சூர்யா.

இளையராஜாவின் ‘பீக் ஹவர்’ காலத்தில் வாழ்ந்த பதினெட்டு ப்ளஸ்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதும்.

“எப்படியிருந்த விவேக் இப்படியாகிட்டாரே...!” டோன்ட் பேனிக். இது பாராட்டுதான்!

தமிழ்சினிமாவை அண்மைக்காலமாக ப்ளூ கலர் வைரஸ்களும், ரெட் கலர் பாக்டீரியாக்களும் அட்டாக் பண்ணி வருவதால், ‘சோ கால்டு’ ஒலக சினிமா படைப்பாளிகளை விட்டு, ரசிகர்கள் பல மைல் தொலைவு தள்ளியிருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (டு லெட், விசாரணை போன்ற உலக சினிமா உருவாகக் காரணமான படைப்பாளிகள் மட்டும் மன்னிப்பீர்களாக!)

சென்ற வருடத்தில் ஒருநாள் ஏதேச்சையாக அந்தக் கானொலியைப் பார்க்க முடிந்தது. தெருவோரத்தில் ஒரு குட்டிப் பெண் வெகு இலாவகமாக வயலின் இசைத்த வண்ணமிருந்தாள். வயலினின் இசையும், அவளது வாசிப்பின் உடல்மொழியும், அபாரமாக இருந்தது.

ஒவ்வொரு 40 விநாடிகளிலும் உலகில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றார் என்ற புள்ளி விபரம் அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அவ்வாறு இறந்து கொள்வோரின் விகிதாசாரத்தில் 15 தொடக்கம் 26 வயதிற்குள்ளானோரின் தொகை அதிகம் என்றறிந்தபோது அது பேரதிர்ச்சியாக இருந்தது.

இன்றைய பொழுதில் எதைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானாலும், இணையத்தில் நாடுவது கூகுள் தேடு பொறியைத்தான். பல்வேறு தேடு பொறிகள் வந்துவிட்ட போதிலும் கூகுளுக்கான இடம் முதன்மையாகவுவே உள்ளது. கூகுளில் தேடினால் எதுவும் கிடைக்கும் என்ற பொருளில் கூகுளாண்டவர் எனச் சிலேடையாகச் சொல்லுமளவுக்கு கூகுள் பிரபலமாகியுள்ளது.

அண்மையில் .நா மனித உரிமைகள் கவுன்சிலின் 40வது அமர்வில் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்ட குறுந்திரைப்படம் இது. «No Fire Zone» ஆவணத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக, இலங்கையின் இறுதியுத்தத்தில் நடந்தவற்றை மீள்பார்வையிட்டபடி  இலங்கை அரசு அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் எப்படி சர்வதேச அழுத்தத்தை தட்டிக்கழிக்கிறது என்பதனைக் காண்பிக்கிறது இக்குறுந்திரைப்படம்.

பெருவெடிப்பில் தோன்றியதில் இருந்து எமது பிரபஞ்சம் மிக மிக நீண்ட காலமாக விரிவடைந்து கொண்டே இருக்கின்றது.

நாம் வாழும் பூமியும், அது அமைந்திருக்கும் சூரிய குடும்பமும் பிரபஞ்சத்தின் மையத்தில் அமைந்திருக்கவில்லை என்பது நவீன விஞ்ஞான யுகம் ஏற்பட்ட காலத்துக்கு முன்பே அறியப் பட்ட ஒன்றாகும்.

அண்மையில் பிரபஞ்சம் (Cosmos) எனப்படும் தொலைக் காட்சி ஆவணத் திரைப்படத் தொடரைப் பார்க்க நேரிட்டது.

பூமியில் உயிரினங்களின் வாழ்க்கைக்கு அவசியமான கார்பன் வாயுப் பொறிமுறையில் பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு டைனோசர்கள் இனம் அழியக் காரணமாக இருந்த விண்கல்லை விட நிகழ்காலத்தில் மனித இனம் அதிக தாக்கத்தை செலுத்தி வருவதாக அண்மையில் அதிர்ச்சியளிக்கக் கூடிய கணிப்பு முடிவு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

4தமிழ்மீடியாவின் மனமே வசப்படு.

மேலும் மனமே வசப்படு பதிவுகளுக்கு : 
http://www.4tamilmedia.com/spirituality/maname-vasappadu
https://www.facebook.com/ManameVasappadu/

மேலும் மனமே வசப்படு : https://www.facebook.com/ManameVasappadu/