website analysis

ராமாயணா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகளவில் வெளியாகும் ராமாயணா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் ‘ராமாயணா’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு உலகின் பிரபல இசையமைப்பாளரான ஹான்ஸ் சிம்மருடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தியத் திரையுலகில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

ராமாயணா படத்தின் முதல் பாகத்திற்கான டிரைலர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் டிரைலர் யூடியூப்பில் 100 கோடி பேரால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

சில நாள்களுக்கு முன் வெளியான இப்படத்தின் முதல் பாடலான ’ஜெய் ஜெய் ராம்’ பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு 3 நாள்கள் முன்னதாக நவம்பர் 5 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் டிக்கெட் முன்பதிவு தசரா (அக். 20) நாளன்று தொடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்