நவம்பர் மாத தொடக்கத்தில் இலங்கையின் கொழும்பிலும் வேறு சில பகுதிகளில் ஆயிரக்கணக்கான மஞ்சள் மற்றும் வெள்ளைநிறத்துப் பட்டாம்பூச்சிகள் பறந்துசெல்வதை பலரும் கண்டு வியந்துள்ளனர்.
இது பட்டாம்பூச்சியின் பருவகால இடப்பெயர்வு எனச் சொல்லப்பட்டாலும் இவ்வாண்டில் நிகழும் மிகப்பெரியதும் பரவலானாதுமாக காணப்படுவதை அவதானித்துள்ளனர்.
உலகளாலவிய ரீதியில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இலங்கையிலும் அதிகரிக்கும் வெப்பநிலையானது அனைத்து உயிரினங்களையும் பாதித்துவருகிறது.
இந்நிலையில் உலகளாவிய ஆய்வு ஒன்றில் காலநிலை மாற்றம் பட்டாம்பூச்சிகளின் வாழ்விட மாற்றங்களில் 79% வீத மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவை தமக்கு பொருத்தமான வாழிடங்களைக் கண்டறியப் போராடும் ஒரு இனம் எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

தொலைதூரப் பயணம்
இலங்கை பட்டாம்பூச்சி பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி குழுவின் செயலாளர் லக்ஷ்மன் குமாரவின் கூற்றுப்படி, பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை பொதுவாக ஆண்டுக்கு இருமுறை — அக்டோபர்-நவம்பர் மற்றும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் — உச்சத்தை அடைகிறது. இக்குழு பல ஆண்டுகளாக இத்தகைய இடப்பெயர்வுகளைக் கண்காணித்து வருகிறது; ஆனால், இம்முறை அவை செல்லும் திசை முந்தைய அவதானிப்புகளிலிருந்து மாறுபட்டுள்ளது. வானிலை நிலவரங்கள் காரணமாக, இந்த பூச்சிகள் மலைப்பாங்கான பகுதிகளைத் தவிர்த்துச் செல்வதாகத் தெரிகிறது.
குமனா தேசிய பூங்காவில் பி.சி.ஆர்.ஜி (BCRG) குழு மேற்கொண்ட முந்தைய ஆய்வு, இலங்கையின் தெற்குப் பகுதி இந்த இடப்பெயர்வுகளுக்கான இனப்பெருக்க மண்டலமாகவோ அல்லது தொடக்கப் புள்ளியாகவோ இருக்கலாம் என்று குறிப்பிடுகிறது. அதே சமயம், வில்பத்து தேசிய பூங்காவில் பட்டாம்பூச்சிகளின் புழுக்கள் உணவருந்தும் தாவரங்கள் ஏராளமாக இருப்பதால், அது இந்த இடப்பெயர்வின் இலக்காக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இருப்பினும், அவற்றின் பாதைகளும் இலக்குகளும் இன்னும் நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளன.
இதன் தொடர்பாக மேலும் கூறுகையில் இலங்கையில் குறிப்பாக உயர்நிலப் பட்டாம்பூச்சிகள், அதிகரித்து வரும் வெப்பநிலையால் மேல்நோக்கி இடம்பெயர்ந்து, பெருகிவரும் அழுத்தத்தை எதிர்கொள்ளக்கூடும். இதனால், மலைத்தொடர்களில் காணப்படும் பட்டாம்பூச்சிகளுக்குச் செல்ல இடமில்லாமல் போகக்கூடும் என தெரிவித்துள்ளார்.
Source : mongabay / ua.news