அக்டோபர் மாதம் சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாதமாக அமைந்துள்ளது. இந்த மாதத்தில், சைபர் மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு விழிப்புணர்வு என்பது ஒரு நாளில் செய்யப்படலாம், ஆனால் ஒரு மாதம் முழுக்க இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றால் அதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர வேண்டும்.
உண்மை எல்லாம் உண்மையே அல்ல
நாம் அண்மையில் பயன்படுத்திய இணையதளத்திலிருந்து ஏதேனும் குறுந்தகவல் வந்தால் உடனடியாக அதனை திறக்க வண்டாம். சரியான எழுத்துகள் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
மின்னஞ்சலை பாதுகாக்க
ஒவ்வொருவரும் அவர்களது மின்னஞ்சலை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மிக சிறப்பான பாஸ்வேர்டு வைத்திருப்பது, பிறர் கணினிகளில் மின்னஞ்சலை பயன்படுத்தினால் லாக் அவுட் செய்வது, ரெகவரி மின்னஞ்சல் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்வது, செல்போன் எண் அப்டேட் செய்வது போன்றவற்றை சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்துங்கள்
செல்போனாக இருந்தாலும் கணினியாக இருந்தாலும் அதற்குரிய பாதுகாப்பு அப்டேட்களை மிகச் சரியாக மேம்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். நாம் மனிதர்கள்தான், தவறுகளை செய்ய வாய்ப்பிருப்பதால், இயந்திரங்களுக்கான பாதுகாப்புக் கருவிகள் விழிப்போடு இருப்பது நமக்கு நல்லது.
மோசடியில் சிக்கிக்கொண்டால்
யாரிடம் சொல்வது, நாம் ஏமாந்துவிட்டோம் என்பதை, சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை சொன்னால் மரியாதை போய்விடுமே என்றெல்லாம் கருதாமல், டிஜிட்டல் அரஸ்ட், வாட்ஸ்ஆப் கால் போன்றவற்றில் சிக்கிக் கொண்டால் உடனடியாக விவரம் அறிந்தவர்களுக்கு தகவல் கொடுத்து உதவி கோருங்கள். தப்பேயில்லை.
புகாரைப் பதிவு செய்யுங்கள்
ஒருவேளை, ஏதேனும் முறைகேடு நடக்க முயற்சி நடந்தால் அதிலிருந்து தப்பித்தால் போதும் என்று நினைக்காமல் அது குறித்து புகார் அல்லது ரிப்போர்ட் செய்வது அவசியம். மோசடி எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் அது எந்தவிதமான எண் என்பதை பதிவு செய்து பிளாக் செய்துவிடுங்கள்.