website analysis

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரும், உலகின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவருமான கிளென் மேக்ஸ்வெல், தனித்துவமான கிரிக்கெட் ஷார்ட்களால் உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளரை வைத்துள்ளார். பிக்-ஷோ என்று அழைக்கப்படும் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணிக்காக மட்டுமின்றி, இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடி பிரபலமானவர்.

கடந்த 2012-ஆம் ஆண்டு சார்ஜாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20-ல் அறிமுகமான மேக்ஸ்வெல், 2013-இல் ஹைதரபாத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

38 வயதான மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியாவுக்காக மூன்று வடிவங்களிலும் 7 டெஸ்ட் போட்டிகள், 149 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 130 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 3,990 ரன்களும், டி20ஐ போட்டிகளில் 2,897 ரன்களும் எடுத்த அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிதளவில் சோபிக்காமல் 339 ரன்களும் எடுத்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி, பந்து வீச்சாளராக அசத்திய மேக்ஸ்வெல், 136 விக்கெட்டுகளை கைப்பற்றி சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரானார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை வாரிகுவித்த மேக்ஸ்வெல், 149 ஒருநாள் போட்டிகளில் விளையா 4 சதங்கள், 23 அரைசதங்கள் என 3,990 ரன்களை குவித்துள்ளார். இதில் 2023 ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 292 இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்களில் தவித்துக்கொண்டிருந்த வேளையில் தொடையில் ஏற்பட்ட காயத்துடன் தனியாளாக 126 பந்துகளில் 201* ரன்கள் குவித்து வெற்றியைத் தேடித்தந்தார். பந்துவீச்சில் 77 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

டி20-களில் 5 சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் என 2,897 ரன்களையும், பந்துவீச்சில் 51 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணி கடந்த 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் ஒருநாள் உலகக்கோப்பையையும், 2021ஆம் ஆண்டில் டி20 உலகக்கோப்பையையும் வென்ற அணியில் முக்கிய அங்கம் வகித்தார்.

கடந்தாண்டு நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒட்டுமொத்தமாக முடிவுரை எழுதியிருக்கிறார் மேக்ஸ்வெல். சர்வதேச, உள்ளூர் போட்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அவர், பிக் பாஷ் லீக், ஐபிஎல் போன்ற டி20 லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்