இன்று (17) அதிகாலை இந்தியப் பெருங்கடலில் உள்ள பண்டா கடற்பகுதியில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் ஏதுமில்லை என வானிலை ஆய்வுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்றும் வானிலை ஆய்வுத் திணைக்களம் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது, 2026-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் திகதி அதிகாலை சுமார் 2:41 மணியளவில், 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பண்டா கடற்பகுதியில், தெற்கு அட்சரேகை 6.16° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 131.5° ஆகிய ஆயத்தொலைவுகளில் பதிவாகியுள்ளது.
தொடர்புடைய தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக வானிலை ஆய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் விளைவாக, இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தற்போது சுனாமி அச்சுறுத்தல் ஏதுமில்லை என அந்தத் திணைக்களம் உறுதியளித்துள்ளது.