இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, இன்று காலை, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
'சிறிலியா சவிய' நிதியத்துடன் தொடர்புடைய கணக்கு ஒன்றில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் விசாரணையின் ஒரு பகுதியாகஇந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் வாக்குமூலம் அளிக்க, கடந்த செப்டம்பர் 24ஆம் திகதி அவர் அழைக்கப்பட்டிருந்தார். இந் நிலையில், கடந்த 16ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் புறப்பட்டிருந்தார். நாடு திரும்பிய பின், விசாரணையில் பங்கேற்பதாக தெரிவித்த அவர்ஈ தனக்கு முன் பிணைவேண்டுமெனவும் கோரியிருந்தார்.
நேற்றுமுன் தினம் இரவு அவர் நாடு திரும்பியிருந்த நிலையில், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் அவர்களும், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.