-
400 ஆண்டுகளுக்கு முன் திருக்கோணேஸ்வரர் ஆலயச் சூழல் எவ்வாறிருந்தது என்பதன் தேடல்
கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமயகுரவர்களில் ஒருவராகிய திருஞானசம்பந்தப் பெருமான், இராமேஸ்வர தீர்த்தக் கரையில் நின்று " கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக் குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே " எனத் திருக்கோணேஸ்வரப் பெருமானைப் பாடியருளினார்.
கி.பி. 17ம் நூற்றாண்டில் கோணேஸ்வரப் பெருமான் கோவில் கொண்டருளிய திருத்தலத்தை போர்த்துக்கீசர் இடித்து, அக் கற்களினால் பெருங்கோட்டையைக் கட்டினர். அக்கோவிலின் பெருஞ்சிற்பங்கள் யாவும், சிறுகற்களாகி, கோட்டைப் பெருஞ்சுவராகி நிற்கும் இன்றைய நிலையில், AI செயற்கை நுன்னறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம், 400 ஆண்டுகளுக்கு முன் திருக்கோணேஸ்வரர் ஆலயச் சூழல் எவ்வாறிருந்த என்பதனை தேடல் மிக்க இளைஞரும், மருத்துவருமான ஜீவராஜ் வடிவமைத்து, பதிவு செய்திருக்கும் அருமையான விளக்கக் கானொலி இது.
"குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்து முரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே." -
வீரம் மிகுந்த வேந்தனின் இசைக்கு வசமானாவன் இறைவன். அந்தப் புராணக் காட்சிளை, ஈழத்து சைவ மரபில் கைலாசவாகனத் திருவிழாவாகச் சிறப்புற்றது. அத்தகைய பெருமைக்குரிய இராவணனைச் சைவசமய நோக்கில், முனைவர் பா.ராஜசேகர சிவாச்சாரியார் கூறும் சிறப்புக்களை இந்தக் கானொளியில் காணலாம்.
-
சுவிற்சர்லாந்தின் பாசல் நகரில் வசந்தகாலத்தின் தொடக்கத்தில் நடைபெறும் களியாட்டவிழா வரலாற்றுச் சிறப்புமிக்கது. அந்த அழகிய விழா தொடர்பான ஒரு சிறப்பான இந்தக் கானொளித் தொகுப்பினை 'மகிழம்' கலையகம் படைத்திருக்கிறது.
-
நோர்வே கலா சாதனா கலைக்கூடம் தொடங்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடுமுகமாக, " யாதும் ஊரே ! யாவரும் கேளீர் ! " எனும் கனியன் பூங்குன்றனாரின் வரிகளை பரதமும், பல்வகை நடனங்களும் கொண்டு புத்தாக்கக் கானொளியாகப் படைத்திருக்கிறார்கள். மிகச் சிறப்பான நடன அமைப்புக்களுடனும், தரமான காட்சிப்பதிவுகளுடனும், அமைந்திருக்கிறது இக் கானொளி நடனமும், பாடலும்.
-
கொரோனா தொற்று எப்போது முடியும் ? Please Subscribe to 4TamilMedia Channel & Support Us :) https://bit.ly/3agyZAJ 4தமிழ்மீடியாவிற்கு சப்ஸ்கிரைப் செய்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் https://bit.ly/3agyZAJ
கொரோனா தொற்று எப்போது முடியும் ? என்பது இன்று எல்லோரிடமும் உள்ள கேள்வி. அது எப்போது முடியும்? எவ்வாறு முடியும்? என்பதனை வரலாற்றின் பக்கங்களிலிருந்து பெறும் ஆதாரக் குறிப்புக்களுடனான ஒரு விரிவான பார்வை இது.

400 ஆண்டுகளுக்கு முன் திருக்கோணேஸ்வரர் ஆலயச் சூழல் எவ்வாறிருந்தது என்பதன் தேடல்

கொரோனா தொற்று எப்போது முடியும் ? Please Subscribe to 4TamilMedia Channel & Support Us :) https://bit.ly/3agyZAJ 4தமிழ்மீடியாவிற்கு சப்ஸ்கிரைப் செய்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் https://bit.ly/3agyZAJ

4தமிழ்மீடியா இணையத்திலும், உங்கள் இதயங்களிலும் இணைந்தது 2008 ஆகஸ்ட் 14. 12 ஆண்டுகள் கழிந்து தொடரும் பயணம் இது..