உப்புக்கும் தங்கத்துக்குமான பணப்பெறுமதியில் மலைக்கும் மடுவுக்குமான தூரம். ஆனால் இவற்றைப் பெறுவதற்கான உடலுழைப்பு என்னவோ சமாந்தரமான இருப்புப் பாதைதான் என்பதை உணர்த்தின, இந்த (2025) ஆண்டு சுவிற்சர்லாந்து நியோன் சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் பார்க்க முடிந்த இரு படங்கள்.