free website hit counter
27
, ஏப்

வோர்ம் ஹோல் (Wormhole - புழுத்துளை?) தொடர்பான புரிதலில் தவறு? : ஹார்வார்டு விஞ்ஞானிகள்

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இதுவரை காலமும் புழுத்துளை எனத் தமிழில் பொருள் கொள்ளப் படும் வோர்ம் ஹோல் (Wormhole) வழியாகக் கால வெளியில் (Space Time) இரு பிரதேசங்களை (அண்டம் அல்லது சமாந்தரமான இன்னொரு பிரபஞ்சம்) இணைக்கும் குறுகலான பாதை வழியாக ஒளிவேகத்தை விடக் குறைவான வேகத்தில் கூட மிகக் குறுகிய காலத்துக்குள் பயணம் செய்ய முடியும் என்றே கருதப் பட்டு வந்தது.

தற்போது இது தொடர்பான புரிதலில் ஒரு பகுதி தவறு என்கின்றனர் ஹார்வார்டு விஞ்ஞானிகள். அதாவது வோர்ம் ஹோல் வழியாக இன்னொரு அண்டத்துக்குப் குறுக்குப் பாதையில் பயணம் செய்ய முடியும் என்பது உண்மை தான். ஆனால் அதற்காக உடனே புறப்பட்டு விடலாம் என முடிவெடுத்து விடாதீர்கள். ஏனெனில் வானியல் பௌதிகவியலின் சமீபத்திய விளக்கப் படி இந்தப் பயணம் ஒளியின் வேகத்தை விட மிக மிக மெதுவாக இருக்கத் தான் வாய்ப்புள்ளது என்கின்றனர் இவர்கள். அதாவது அண்டங்களுக்கு இடையேயான இந்த குறுக்குப் பாதைகளான வோர்ம் ஹோல் மூலம் விண்வெளிப் பயணங்களை இலகுவாக மேற்கொள்வது என்பது இயலாத ஒன்றாகும் என்கின்றனர் ஹார்வார்டு விஞ்ஞானிகள்.

வானவியல் கல்வியில் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த சமீபத்திய கண்டுபிடிப்பு தொடர்பில் டென்வரில் நடைபெறவுள்ள 2019 ஆமாண்டுக்கான அமெரிக்கன் பௌதிக சமூகத்தின் ஏப்பிரல் ஒன்றுகூடலில் ஹார்வார்டு விஞ்ஞானி டேனியல் ஜஃபெரீஸ் தனது கருத்துக்களை முன்வைக்கவுள்ளார். இதுதவிர வோர்ம் ஹோல் இனை செயற்கையாக உருவாக்கி அதனூடாக ஒளியைப் பயணிக்க வைக்க முடிந்தால், நவீன பௌதிகத்தின் அனைத்து 4 அடிப்படை விசைகளையும் இணைக்கும் புதிய ஒருங்கிணைப்புக் கொள்கை அல்லது மாடலை அமைக்க அவசியப் படும் Quantum Gravity அதாவது குவாண்டம் ஈர்ப்பு கொள்கையை விருத்தி செய்யவும் முடியும் என டேனியல் ஜஃபெரீஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் முன்பு காலப் பயணம் மேற்கொள்ள உதவும் என்று கொள்கை அளவில் கருதப் பட்ட Traversable Wormholes இனை செயற்கையாக உருவாக்க Exotic matter எனப்படும் மறை சக்தி (Negative energy) கொண்ட பதார்த்தம் தேவைப் படுகின்றது. ஆனால் குவாண்டம் ஈர்ப்பின் விளைவால் இந்த மறை சக்தியானது சீரற்றுக் காணப் படுவதால் இதில் பெரும் தடை காணப் படுவதாகவும் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

Ula

new-year-prediction