free website hit counter

2024 புத்தாண்டுப் பலன்கள் !

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எண்ணியது இனிதாய் நடக்கப் போகும் 2024ம் புத்தாண்டில் பன்னிரு இராசிகளுக்குரிய விரவான பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதியுள்ளார்கள்.

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசோபக்ருத் வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 15ம் தேதி பின்னிரவு 16ம் தேதி முன்னிரவு, 01 ஜனவரி 2024, திங்கட்கிழமையும் க்ருஷ்ணபக்ஷ பஞ்சமியும் மகம் நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் கௌலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 12 மணிக்கு கன்னியா லக்னத்தில் ரிஷப நவாம்சமும் மகர திரிகோணமும் கொண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

மகம் நக்ஷத்ரம் சிம்ம ராசி கன்னி லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டில் அனைவரும் சீரும் சிறப்புடனும் - ஆயுசுடனும் - ஆரோக்கியத்துடனும் - அனைத்து விதமான ஷேமங்கள் பெறவும் - திருமணம் கைகூடி வரவும் - சந்தாண பாக்கியம் கிட்டவும் - நல்ல வேலை கிடைக்கவும் - வெளிநாடு பயணம் இனிதே பெறவும் - வீடு மனை வாகனம் அமையவும் ஆண்டின் தொடக்க நாளில் இறைவனை திருக்கோவில்களில் சென்று வழிபாடு செய்து வருவது நல்லது.

இந்த ஆண்டு சிவனுக்கும் வினாயகருக்கும் உகந்த நக்ஷத்ரமான ஸ்வாதி நக்ஷத்ரத்தில் பிறக்கிறது. மண்ணில் வாழும் மக்களுக்கு எல்லாம் பொன்னும் பொருளும் போகமும் செல்வாக்கும் சொல்வாகும் இன்னும் பெருகும். கன்னியர்களின் கவலைகள் தீரவும் - காளையர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைத்திடவும் - எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறவும் தைரிய ஸ்தானத்தில் இருக்கும் லக்னாதிபதி புதனுக்கு உகந்த தேவதையான ஸ்ரீமன் நாராயணனையும் - மகம் நக்ஷத்ரத்திற்கு உகந்த தேவதையான வினாயகரையும் வணங்கி வர அனைத்தும் நிறைவேறும். புத்தாண்டின் கிரகநிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவக்கிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் சந்தோஷங்களை அள்ளித்தரும் கிரக அமைப்பில் இருப்பது நன்மையே.

கிரகநிலை:
லக்னம் கன்னி - தைரிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்களுடைய உலா இருக்கிறது.

சனியின் ஆதிக்கம் பெற்ற எண்: 2024:
இந்த வருடத்தின் கூட்டு எண்: 2 + 0 + 2 + 4 = 8. எட்டு என்பது ராகுவின் ஆதிக்கம் பெற்ற எண். துர்க்கைக்கும் வாராகி தேவிக்கும் உகந்த எண் நான்காகும். ஆண்டு பிறக்கும் நேரத்தில் லக்னாதிபதி புதன் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி புதன் தைர்ய ஸ்தானத்தில் சுயசாரம் பெற்றிருக்கிறார். லக்ன தொழில் அதிபதி புதனும் பஞ்சம ரண ருணாதிபதி சனியும் கேந்திரம் பெற்றிருக்கிறார்கள். குடும்பாதிபதி பாக்கியாதிபதி சுக்கிரன் தைரிய வீர்ய ஸ்தானத்தில் இருக்கிறார். தொழில்காரகனான சனி ரண ருண ரோக ஸ்தானத்தில் தைரிய அஷ்டமாதிபதி சாரம் பெற்றிருக்கிறார். தொழில் வளர்ச்சி அடையும். பங்குசந்தைகள் நல்ல வளர்ச்சி காணும். பணம் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் மெல்ல மெல்ல சரியாகும்.

இந்த ஆண்டு நடைபெறும் குருப் பெயர்ச்சிக்குப் பிறகு நாட்டின் பொருளாதார நிலைமை உச்ச நிலைக்கு செல்லும். ரியல் எஸ்டேட் துறை படிப்படியாக முன்னேற்றம் அடையும். அதிகமான திருமணங்கள் நடைபெறும். குழந்தைபிறப்பு விகிதம் அதிகமாகும். அதிகமான கோவில்களுக்கு புணரமைப்பு நடந்து கும்பாபிஷேகங்கள் நடைபெறும். அரசாங்கம் ரீதியாக பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து அதிகமான பிரச்சனைகள் ஏற்படலாம். ராணுவம் பலம் பெற்று நாட்டைக் காப்பாற்றும். மழை வளம் சிறப்பாக இருக்கும்.

உங்கள் இராசிகளுக்கான நிறைவான தினப்பலன்களை தினமும் காண உங்கள் " உலா" செயலியை உங்கள் அலைபேசிகளில் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

Ula

இந்த ஆண்டு நடைபெறும் முக்கிய கிரக பெயர்ச்சிகள் - வாக்கிய பஞ்சாங்கப்படி:

குருப் பெயர்ச்சி:
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் சித்திரை மாதம் 18ம் நாள் (01.05.2024) சனிக்கிழமை அன்று குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார். ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் கன்னியா ராசியையும் - ஏழாம் பார்வையால் வ்ருச்சிக ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் மகர ராசியையும் பார்க்கிறார்.
இவ்வருடம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை.

வளமாக இருக்க போகும் ராசிகள்:
மேஷம் - சிம்மம் - துலாம் - தனுசு

முயற்சிக்குப் பின் வெற்றி பெறப் போகும் ராசிகள்:
ரிஷபம் - மிதுனம் - கன்னி - மீனம்

இறைவனை சரணடைவதன் மூலம் உபாயம் பெறப் போகும் ராசிகள்:
கடகம் - வ்ருச்சிகம் - மகரம் - கும்பம்

பொதுப் பலன்கள்:
கன்னியர்களுக்கு தகுந்த மணமாகும். மாலை வாய்ப்புகளும் - மழலை பாக்யமும் - வேலைவாய்ப்புகளும் வியக்கும் விதத்தில் இருக்கும். பத்திரிகைத்துறை - எழுத்துதுறை - ஆசிரியர் துறை - கணிதம் - ரசாயணம் - ஆண்மீகம் - சோதிடம் - வழக்கறிஞர் துறை - புத்தகத்துறை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுக்ரன் ஆட்சியாக இருப்பதால் கலைத்துறை செழிக்கும். கலைஞர்கள் கௌரவப்படுத்தப்படுவார். வண்ணத்திரை சின்னத்திரை இரண்டுமே மக்களுக்கு பயனளிக்கும். உணவிற்கு எந்த விதமான பங்கமும் இராது. உணவு உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலை நிர்ணயமாகும்.

மக்களுக்கு பொருளாதார நிலை உயரும். பெட்ரோல் - டீசல் - கச்சா எண்ணை - சமையல் எண்ணை விலை அதிகமாக உயரும். இந்திய ரூபாயின் மதிப்பில் சலனம் இருக்கும். தங்கம் - வெள்ளி விலையும் உயரும். நிறைய சிவாலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அரசாங்கத்தில் சிறு சிறு ஊசல்கள் இருக்கும். மழை பொழிவு நன்றாக இருக்கும். சராசரி வெயில் அளவை இந்த வருடம் வெப்பம் அதிகரிக்கும். காட்டில் நெருப்பால் அழிவு ஏற்படலாம். அண்டார்டிகா - அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் - சுமத்ரா தீவு - ஜப்பான் போன்ற இடங்களில் பூகம்பம் வர வாய்ப்புள்ளது. யாராலும் சரியான முறையில் வானிலையை கணித்து கூற முடியாத நிலை ஏற்படலாம். அணு ஆயுதத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தண்ணீர் தேவை அதிகமாகும். காடுகளை அழிப்பது அதிகமாகும். கடவுளுக்கு எதிராக பேசும் நபர்கள் அதிகமாவார்கள்.

ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான புத்தாண்டுப் பலன்களை உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம். 

 

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction