free website hit counter

மு.க.ஸ்டாலினுக்கு ‘மிக மிக அவசரம்’ படத்தின் இயக்குநர் நன்றி !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள், பாதுகாப்பு போலீஸ் வண்டிகள் பின்தொடர காரில் செல்லும்போது சாலைகளில் பெண் போலீஸாரை பாதுகாப்பு பணிக்கு இனி நிறுத்தக் கூடாது என்று தமிழ் காவல்துறைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அரசு உத்தரவு வரும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இதுபோன்ற பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்படும் பெண் போலீசாரின் இயற்கை அழைப்பு, குடிநீர் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர்களது இந்தப் பிரச்சினையைப் பேசும் ‘மிக மிக அவசரம்’ படத்தை இயக்கினார் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி. அந்தப் படத்துக்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. தற்போது ‘மிக மிக அவசரம்’ படத்தில் எடுத்தாளப்பட்ட கருத்துக்கு தமிழக காவல்துறையின் இந்த முடிவால் மரியாதை கிடைத்துள்ளது. இதுகுறித்து இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமட்சி, சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“பெண் போலீசாரின் பெரும்துன்பங்களில் ஒன்று பிரபலங்கள் வரும்போது பாதுகாப்பிற்காக சாலைகளில் நிற்பது. அதிலென்ன இருக்கிறது என சாதாரணமாகக் கடந்து போகும்போது... ஒரு சின்ன சிக்கல் எவ்வளவு பெரிய வலியையும் அவஸ்தையும் தருகிறது என்பதை மிக மிக அவசரம் படத்தில் சொல்லியிருந்தோம். ரொம்ப சின்ன கதைக் கருதான். ஆனால் அதன் பின்னிருந்த அழுத்தமான வலி பெரு வெற்றியைத் தந்தது. திரையரங்கில் ஓடியதைவிட, இன்று இந்த அறிவிப்பால் உண்மையாகவே பெருமைகொள்கிறேன். மகிழ்கிறேன். பெண்போலீசார் சாலையோர பாதுகாப்பில் ஈடுபட வேண்டாம் என அறிவித்திருக்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. ஸ்டாலின் க்கும்... மரியாதைக்குரிய டிஜிபி -க்கும் மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படைப்பிற்கு கதை எழுதிய இயக்குநர் ஜெகன்னாத், நடித்த பிரியங்கா, அரீஷ் குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் , இயக்குநர் சீமான், இயக்குநர் சேரன், மற்றும் படத்தை வெளியிட்ட லிப்ரா ரவீந்தர் சந்திர சேகரன், இணைந்து தயாரித்த குங்ஃபூ ஆறுமுகம், ஒளிப்பதிவாளர் பாலபரணி, எடிட்டர் சுதர்சன், இசையமைப்பாளர் இஷான் தேவ், மக்கள் தொடர்பாளர் ஜான் ஆகிய அனைவருக்கும் நன்றிகள்.

படைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் மிகமிக அவசரம் படம் எடுத்தற்காக உண்மையாகவே பெருமைகொள்கிறேன்.

இப்படிக்கு
- சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction