free website hit counter

கமலின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்தவர்கள் அடுத்தடுத்து வெளியேறியது என கமல் கடும் நெருக்கடியில் இருந்தபோதும், தன்னுடைய களமான சினிமாவில் மீண்டும் முழு வீச்சில் இறங்கி ‘விக்ரம்’ படத்தை நடித்து தயாரித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் முதல் முறையாக கமலுடன் இணைந்து சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வந்தன.

அதேசமயம் சென்னையில் நடந்த விக்ரம் இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சூர்யா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள டிரைலரில் நடிகர் சூர்யாவின் காட்சி ஒன்று வெளியாகியுள்ளதாக சூர்யாவின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். விக்ரம் பட டிரைலரில் முகத்தை மூடி வருபவரும், கையில் இருந்த கத்தியை தூக்கு எறிபவரும் சூர்யா தான் என்று தற்போது தெரியவந்துள்ளது. விக்ரம் படத்தில் சூர்யா இருக்கும் சூட்டிங் ஸ்பாட் படம் வெளியாகியிருக்கிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction