free website hit counter

1000 க்கும் மே‌ற்ப‌ட்டோர் திடீர் பணி இடமாற்றம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கோவை மாவட்டத்தில் அதிகளவான ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கடந்த 3 ஆண்டுக்கு மேலாக பணியிட மாற்றம் செய்யப்படாமல் பணியாற்றி வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், எடை அளவையாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றப்பட்டனர்.

மகளிர் சுய உதவி கடைகள் தவிர இதர அனைத்து கடைகளும் பணியாற்றும் ஊழியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி இடமாற்றம் வழங்கல் பிரிவு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிலர் தங்களை மீண்டும் பழைய கடைகளில் பணியிடமாற்றம் செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் ரேஷன் கடைகளில் மீண்டும் பணி இடமாற்றம் செய்ய மறுத்து விட்டனர். சிலர் அரசு ஊழியர்கள் மீது முறைகேடு விதிமுறை மீறல் புகார் இருப்பதாகத் தெரிகிறது.

இவர்கள் மீது கடந்த காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டன. கடந்த காலங்களில் வழக்கு மற்றும் புகாரில் சிக்கிய ஊழியர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction