free website hit counter

புத்தாண்டுக்கான அத்தியாவசிய சேவைகளை பேணுவதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு அதிகாரிகள் பணிப்புரை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு (அவுருது) காலத்தில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொது சேவைகளை தடையின்றி பேணுவதை இலக்காகக் கொண்ட முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் எவ்வித இடையூறுகளும் இன்றி அத்தியாவசிய சேவைகளை சீராகச் செய்வதற்கு உத்தரவாதமளிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

மேலும், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு, போக்குவரத்து அமைச்சு மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு போன்ற 'அத்தியாவசிய' பிரிவின் கீழ் வரும் நிறுவனங்கள் இணைந்து இந்த திட்டத்தை தயாரிப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில், நாடு முழுவதும் பொது பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கையும் பேணுவதையும் உறுதிப்படுத்தும் வகையில் விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பாதுகாப்புப் படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction