தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இயக்கம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் யாரும், அதற்குமுன் மூன்றவிதமான பரிசோதனைகளை செய்துகொள்வது நலம் பயக்கும் என்று புதிய ஆலோசனையை கூறுகிறார் பதிவுபெற்ற சித்த மருத்துவர் வி. சண்முகம்.

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இந்த வாரத்தின் துவக்கத்தில் ஹைதராபாத்திலிருந்து செயல்படும் பாரத் பயோடெக் என்னும் இந்திய நிறுவனம் ஒன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR – Indian Council of Medical Research) மற்றும் பூனாவிலுள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துடனும் (NIV – National Institute of Virology) இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாகவும் அதன் பெயர் கோவாக்சின் என்றும் அறிவித்திருந்தது. 

More Articles …