இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்
தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.