free website hit counter

ஈழ மக்களை நேசித்த தலைவர் விஜயகாந் !

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அன்னமிட்ட கைகள் என எம்.ஜி.ஆருக்குப் பின் மக்கள் மனம் நிறைந்து பாராட்டிய மனிதர், நடிகர், தேமுதிக கட்சி தலைவர், விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார். சென்னை மியாட் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த  அவர் சுவாச பிரச்சனை காரணமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈழத் தமிழ் மக்கள் மேல், பன்னெடுங்காலமாகவே உளப்பூர்வமான பற்றுதல் கொண்டவர்.  ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில், தமிழகத்தில் பல்வேறு உதவிகளை பிரச்சாரங்கள் ஏதுமின்றி, ஆத்மார்த்தமாக அளித்து வந்தவர். அதனால் தன் இரு மகன்களில் ஒருவருக்கு  பிரபாகரன் எனப்பெயர் சூட்டியதுடன், தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை நிராகரித்தவர்.

தமிழ்த் திரையுலகில் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து பெரும் வெற்றி அடைந்தவர்கள் பட்டியலில் எம்ஜிஆருக்குப் பின் விஜயகாந்தைத் தவிர வேறேவருமில்லை. தமிழகத்தில் மூன்றாவது பெரிய வாக்கு வங்கி உள்ள கட்சியாக அவரது தேமுதிக கட்சி உருவாகும் வண்ணம்  மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தார்.

விஜயகாந்தின் இயற்பெயர் நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி. ஆகஸ்ட் 25, 1952 இல் இந்தியாவின் தமிழ்நாடு, மதுரையில் பிறந்தார். 1979 ஆம் ஆண்டு  இனிக்கும் இளமை மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான அவர், 1981 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்மார்.

வெற்றிகரமான நடிகராகிய பின்னர் அவர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக திரைத்துறையில் தன்னை அடையாளப்படுத்திய பின்னர், அவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேதிமுக) அரசியல் கட்சியை நிறுவி, அதன்  தலைவராக இருந்தார். இக் கட்சி மூலம்,  முறையே விருத்தாசலம் மற்றும் ரிஷிவந்தியம் தொகுதிகளின்  பிரதிநிதியாக, இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 

பிறருக்கு உணவளிப்பதில் பெரு மகிழ்ச்சி கொண்ட அன்னமிட்ட கைகள், அள்ளிக் கொடுப்பதை இன்று நிறுத்திக் கொண்டன. அஞ்சலிகள் !

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula