இழுவை வலை தடைச் சட்டத்தின் அவசியம்! (புருஜோத்தமன் தங்கமயில்)
கடந்த திங்கட்கிழமை இரவு எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்தியப் படகொன்றின் மீது இலங்கைக் கடற்படையின் கண்காணிப்புப் படகு மோதியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ்கீரன் என்கிற மீனவரே உயிரிழந்திருக்கிறார். அவருக்கு திருமணமாகி நாற்பது நாட்கள் மட்டுமே ஆகியிருக்கின்றன. இலங்கை – இந்தியக் கடற்பரப்பில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மீனவர்களில் ஒருவராக ராஜ்கீரனும் மாறியிருக்கின்றார்.