free website hit counter

நேர் - எதிர் !

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அது ஒரு அற்புதமான அதிகாலை நேரம்; அது ஒரு அருவறுப்பான முற்பகல் நேரம் !

கைப்பேசி அலராம் சினுங்காமாலே 5 மணிக்கு விழிக்கும் கண்கள்; கைப்பேசி அலராம் திரும்ப திரும்ப சினுங்கி கூடினாலும் பிதுங்க மறுக்கும் கண்கள்

நேர்மறை வண்ணங்களை தூண்டும் மிதமான காலநிலை; எதிர்மறை எண்ணங்களை பரப்பிவிடும் அதிதீ காலநிலை

புத்தூணர்ச்சியை தரும் மெல்லிய சேவல் கூவலும் பறவைகளின் ஓசைகளும்; மேலும் சோர்வைத்தரும் சேவல்களின் அலரர்களும் இன்னபிற இரைச்சல்களும்

மனதையும் உடலையும் தூய்மைப்படுத்தும் குளிர்ந்த நீரின் ஸ்பரிசமும்; மேலும் சூட்டைக்கிளப்பும் வெப்ப நீரின் சலனமும்

தன்னார்வம் ததும்பும் சிந்தனையும் அன்றைய பணியைத்தொடங்க துறுதுறுக்கும் கைகளும்; ஒட்டுமொத்தமாக அடைத்துக்கொண்டிருக்கும் சிந்தனைகளும் அன்றைய பணியைக் கடத்தத்தள்ளும் கைகளும்

பசிக்க தொடங்கும் போதே உணவைச் சுவைக்கும் வாயும்; அளவாக பூரணமாகும் வயிறும்; சமைக்கப்பட்ட உணவைக்கூட சுவைக்க சுணக்கம் காட்டும் வாயும் காற்றை அடைக்கும் வயிறும்

கைப்பேசி அழைப்பாளர்களை கவனித்து பதில் அனுப்பும் 'பொறுமையும் வீட்டில் உள்ளவர்களை வீட்டையும் கவனிக்கும் பொறுப்பும்; கைப்பேசியை முடக்கி வைக்கும் வெறுமையும் வீட்டில் உள்ளவர்களை உதாசீனப்படுத்தும் தன்மையும்

பணி நடுவே துள்ளல் இசையை கேட்டு நடன அசைவை காட்டும் உடலும் தனிமையிலும் குறும்பை ரசிக்கும் மனமும்; மெல்லிசையும் சோகமாக ரசிக்க பிடிக்காமல் உடல் இறுக்கத்தை மோசமாக்கும் பணியும்

அதிக பணிகள் அற்ற தளர்வான நாளாகவும் பணிகளை செய்த திருப்தியும் ; பணிச்சுமையால் நிதானமற்ற நாளும் தாமதமாகும் பணிகளும்

தேவையான இடைவெளிகளை மட்டும் எடுக்கும் பணி போக்கும் ஆனால் அலைபேசியில் மன எழுச்சிக்கான தேடல் மினக்கடலும்; கூடுதல் இடைவெளிகளை விரும்பும் பணிபோக்கும் நேரகடத்தலுக்கான அலைபேசி நோன்டலும் (அல்லது வேறு பொழுதுபோக்கு)

கணனிப்பணி முடித்த அலுப்பில்லாத உற்சாகமும் 'புத்தக வாசித்தலும்'; கணனிப்பணியின் களைப்பும் எதையும் செய்ய நாட்டமில்லாத வெறுப்பும்

சுய அழகுபடுத்த முனையும் நெஞ்சமும்  தேக நல பேணலுக்கான அக்கறையும்; தேக நலத்தை மறக்கும் நெஞ்சமும் அக்கறையற்று போகும் சிகையும்

புதுமைப்படைக்க துடிக்கும் ஆசையும் உடனே செயற்படுத்தும் தைரியமும் ; பழமைக்குள் சிக்கித்தவிக்கும் நிராசையும் செயலாற்றா அவநம்பிக்கையும்

நல் உரையாடல்களின் அதிர்வளைகளும் ஊக்கமும் ; எதிர்மறை உரையாடல்களின் உஷ்ணமும் குறை கூறவைக்கும் சூழ்நிலைகளும்

எதுவும் விரைவில் விளங்கிக்கொண்டு வேகமெடுத்து விவேகமாகும் மூளையும்; விளங்கினாலும் விவரிக்க இயலாத புரிதல்களும் கணத்துக்கொண்டிருக்கும் இதயமும்

நிகழ்கால மகிழ்வுகள் மட்டும்; இறந்தகால பிதற்றல்களும் எதிர்கால அச்சங்களும்

இரவின் அமைதியும் படுத்தவுடன் நிம்மதியான உறக்கமும்; இரவு இருண்ட கனவுகளின் பயமும் ''உறக்கம்" அது காணாமல் போன தூரமும்!

இவை அன்றாடம் மனதால் பலர் அனுபவிக்கப்பட்டு வரும் சந்தர்ப்பங்களாக இருக்கலாம். இவை மன அழுத்தங்களால் பலர் கஸ்டப்படும் சந்தர்ப்பங்களாக இருக்கலாம்.

இவை அண்மையகால நல் மாற்றங்களின் அறிகுறிகளாக இருக்கலாம் ; இவை அண்மையகால நிலைமைகளைகளின் பாதிப்பாக இருக்கலாம்.

இவை உங்களுக்கு மேலும் நல் வளர்ச்சிகளை கொண்டுவரலாம்; இவை இன்னும் நல் வளர்ச்சிக்கான கால தாமதத்தை கொடுத்துக்கொண்டிருக்கலாம்.

இது நிலையான தன்னம்பிக்கை; இது ................... நம்புங்கள் மாறும்! மாற்றம் ஒன்றே மாறாதது!

- 4தமிழ்மீடியாவிற்காக : ஹரிணி

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula