“எங்களுக்கான காலம் வரும்!” : லொகார்னோவில் ஒரு அழகிய கானாத் திரைப்படம்
லொகார்னோ திரைப்பட விழாவில், முழு நீளத்திரைப்பட பிரிவில் கானா நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவந்த Amartel Armar இன் Ego Reach We All (Our Time Will Come) எனும் திரைப்படத்தை காணக்கிடைத்தது. இதில் கதாநாயகனாக நடித்த Idrissu Tontie Jr. க்கு சிறந்த நடிகருக்கான லொகார்னோ விருது கிடைத்தது. அதோடு எதிர்கால மாற்றத்துக்கான நடுவர் குழு விருதும் இத்திரைப்படத்திற்கே கிடைத்தது.