களைகட்டும் கருத்துக் கணிப்புகள் !

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நாலா பக்கத்திலிருந்தும் இம்முறை எதிர்ப்பு வந்துள்ளது. ஆனால், தற்போது ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சி பற்றிய கணிப்புகள்தான் சமூக வலைதளங்களில் சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

யூடியூபில் 5 கோடி பார்வைகளைக் கடந்து பிரபலமாகிவரும் ‘என்ஜாய் என்ஜாமி’ பாடலை பாடிய பாடகி தீ, சொல்லிசை பாடகர் அறிவு ஆகியோர் பிக்பாஸ் 5-ல் கண்டிப்பாகக் கலந்து கொள்வார்கள் என்று விஜய் டிவி வட்டாரத்தில் இப்போதே செய்தியைக் கசியவிட்டிருக்கிறார்கள்.

இதுவொருபக்கம் இருக்க, தேர்தலில் எத்தனை சதவீதம் வாக்குகள் வாங்கினாலும் கமல்ஹாசன் தான் தொகுப்பாளர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்பதில் விஜய் டிவி உறுதியாக இருக்கிறதாம். காரணம், கமலுக்கான டி.ஆர்.பி என்பது கடந்த இரண்டு சீசன்களால் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்கிறது விஜய் டிவியின் மார்க்கெட்டிங் வட்டாரம்.

 

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கும் 15 கோடி ரூபாயை கமலுக்கு ரெமுனரேஷனாக கொடுத்திருக்கிறதாம் விஜய் டிவி. ஆனால், தனது சம்பாத்தியத்திலிருந்து தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லையாம். மக்கள் நீதி மையத்தின் பொருளார் பிரபல தொழில் அதிபர் சந்திரசேகரன் 5 கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்