website analysis

2022 இற்கான பரீட்சை திகதிகளை அறிவித்தது கல்வி அமைச்சு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 28ம் திகதி முதல் டிசம்பர் 23ம் திகதி வரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வருடத்துக்கான 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையான காலப் பகுதியில் நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்