website analysis

புதிய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆ​ணைக்குழு அறிவிப்பு.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த திகதி குறிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆ​ணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

வாக்குச்சீட்டு அச்சிடல் உள்ளிட்ட சில சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாமல் போனதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேர்தலை நடத்துவதற்கு சாதகமான தினமாக ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி காணப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் திகதி குறித்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தௌிவுபடுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைய, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்