இலங்கையில் இந்திய இராணுவம் ? - இந்தியா மறுப்பு !
இலங்கையில் அமைதிநிலையைத் தோற்றுவிக்க இந்திய இராணுவம் அனுப்பட்டுள்ளதான செய்திகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.
Teline V
Best News Template For Joomla
இலங்கையில் அமைதிநிலையைத் தோற்றுவிக்க இந்திய இராணுவம் அனுப்பட்டுள்ளதான செய்திகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.
தலைநகர் கொழும்பில் நேற்றைய தினம் மைன கோ கம மற்றும் கோட்ட கோ கம போராட்டக் களங்களின் மீதான தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்கள், உதவியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சட்டத்தரணிகள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் நேற்றுக்காலை காலிமுகத்திடலில் அமைதியாக நடந்து வந்த ஆர்பாட்டக்காரர்களினை நோக்கி மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் பெரிதாகி நாடாளாவிய ரீதியில், அரசாங்க உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாகவும், அவர்களது சொத்துக்களுக்குச் சேதங்களையும் விளைவித்துள்ளது.
நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் மஹிந்தராஜபக்ஷ பதவி விலக வேண்டும் எனப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இன்று அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.