தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சென்னை: இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களிலும் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது.
29ம் திகதி முதல் 31ம் திகதி வரை கோவை, நீலகிரி மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்