இன்று முதல் சென்னையின் 9 இடங்களில் கடை திறப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சென்னை: சென்னையில், தி.நகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட 9 இடங்களில் இன்று முதல் கடைகளை திறக்க அனுமதி

அளிக்கப்பட்டுள்ளது. கடையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் ஜூலை 30ஆம் திகதி நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, பக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்