இத்தாலியில் அக்டோபர் 15 முதல் பணியிடங்களிற்கும் " கிறீன்பாஸ் " கட்டாயமாகிறது.
இத்தாலியில் வரும் அக்டோபர் 15 முதல், அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் செயலாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ' தடுப்பூசிச் சான்றிதழ்' தேவை கட்டாயமாகிறது. இத்தாலியை "பாதுகாப்பு நிலையில்" வைத்திருக்கும் நடவடிக்கையாக இத்தாலியப் பிரதமர் இதனை இன்று அறிவித்தார்.