சுவிற்சர்லாந்திற்கு உக்ரைன் அகதிகள் 60,000 பேர் வரலாம் !
சுவிற்சர்லாந்துக்கு உக்ரைனில் இருந்து 60,000 மக்கள் அகதிகளாக இடம்பெயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது ஒரு துல்லியமான மதிப்பீடாக இருக்காது என சுவிஸ் மத்திய அரசின் நீதித்துறை மற்றும் காவல்துறையின் தலைவர் கரின் கெல்லர்-சுட்டர் நேற்று உள்ளூர் செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.