பிரான்ஸ் அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே.
பிரான்ஸின் தேசிய கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் பிரான்ஸ் தோல்வியுற்றதையடுத்து, அவ்வணியின் தலைவர் ஹியூகோ லோறிஸ் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமிக்கப்பட்டுள்ளார் என பிரெஞ்சு கால்பந்தாட்டச் சம்மேளனம் அறிவித்துள்ளது.

பயிற்றுநர் டெஸ்சாம்ப்ஸுடனான கலந்துரையாடலையடுத்து, அணித்தலைவர் பதவியை கிலியன் எம்பாப்பே ஏற்றுக்கொண்டுள்ளார்.

பிரெஞ்சு அணி எம்பாப்வேயின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நெதர்லாந்துடன் யூரோ 2024 கிண்ண போட்டியில் மோதவுள்ளது. பிரான்ஸில் இப்போட்டி நடைபெறும்.

உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் பின் பிரான்ஸ் பங்குபற்றும் முதல் போட்டி இதுவாகும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்