ஐ.பி.எல் லீக் சுற்று நிறைவு

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
10 அணிகள் பங்கேற்ற 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் கடந்த மார்ச் 31-ந்தேதி தொடங்கியது.
3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களிலும், தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

70 லீக் போட்டிகளும் நடந்த முடிந்ததை தொடர்ந்து, ஒரு வழியாக பிளே-ஆஃப் சுற்றில் விளையாட உள்ள 4 அணிகள் எவை என்பது கடைசி லீக் போட்டி மூலம் உறுதியாகியுள்ளது.

இந்த லீக் ஆட்டத்தின் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய நான்கு அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள், தலா 7 வெற்றிகளுடன் 5 மற்றும் 6வது இடத்தில் நீடிக்கிறது. அதேபொன்று, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 6 வெற்றியுடன் 7 மற்றும் 8வது இடத்தை பிடித்தன. டெல்லி மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள், முறையே 5 மற்றும் 4 வெற்றிகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டன.

சென்னை சேப்பாக்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. 24-ந்தேதி வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டத்தில் லக்னோ-மும்பை அணிகள் சந்திக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்