வார ராசிபலன்கள் - ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 30 வரை

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பன்னிரு இராசிகளுக்குமான வார ( ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 30  வரை ) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.

மேஷம் : (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)

சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். பேச்சு திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு எதிர்காலக் கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சியில் தாமதங்கள் ஏற்படும்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 24

பரிகாரம்:  காளியம்மன் வழிபாடு 

இடபம்:(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம்தேவை. கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம்.

மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 25,26

பரிகாரம்: மகாலக்ஷ்மி வழிபாடு 

மிதுனம்: (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)

தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் குறையலாம். உடன்பிறப்புகளின் வழியில் செலவு அதிகரிக்கும்.மனக்கவலை அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் வழியில் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.

மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பெண்களுக்கு குடும்பத்தில் சில பிரச்சினை உருவாகலாம்.விலை உயர்ந்த பொருட்களை விற்க வேண்டிய சூழல் உருவாகும். குறிப்பாக தொழில் நஷ்டத்தை ஈடுகட்ட வாங்கிய சொத்துக்களை விற்க வேண்டியதிருக்கும்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 26,27,28

பரிகாரம்: சிவபெருமான் வழிபாடு 

 கடகம்: புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம் 

ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும். 

குடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும்.அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 28,29,30

பரிகாரம்: தன்வந்திரி பகவான் வழிபாடு 

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்

பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும்.

இந்த வாரம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.

பரிகாரம்: மாரியம்மன் வழிபாடு

ஜோதிடரின் சிறப்பான கணிப்பில்  தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.

உலா செயலி இணைப்பு

கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்

 நினைத்த காரியங்கங்கள் வெற்றி பெறும். செய்யும் செயல் உங்களுக்குச் சாதகமான பலனைத் தரும். எதிலும் ஊக்கமோடு செயல்படுவீர்கள். வியாபாரம் முன்னேற்றமாக இருக்கும். தடைபட்ட காரியங்கள் நடைபெறும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புண்டு.

அலுவலகத்தில் உங்கள் சொல் செயல் இரண்டும் பாராட்டப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பெண்களுக்கு திருமணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.தம்பதிகள் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பரிகாரம்: தெட்சிணாமூர்த்தி வழிபாடு 

துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்

மனதில் இருந்து வந்த குழப்பம் படிப்படியாக நீங்கும். குடும்ப நிலையை பொறுத்தவரை பல விஷயங்களை விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். தொழில் துறையினர் புதிய இயந்திரங்களை அமைத்து உற்பத்தியை பெருக்கும் சூழல் அமைந்துள்ளது.மூன்றாம் நபர் ஆலோசனை குறித்து அதிக விழிப்புணர்வு தேவை. குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் ஏற்படலாம்.

சகோதர உறவுகள் தேவையற்ற தொல்லைகளைத் தரலாம். புதிய முதலீடுகள் இப்பொழுது வேண்டாம். யாருக்கும் நீங்கள் ஜாமீன் இருக்க வேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள்.தந்தை மகன் உறவுகளில் சிக்கல்கள் வரலாம் தேவையில்லாத கோபதாபங்கள் ஏற்படலாம் என்பதால் வாதப் பிரதிவாதங்களைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: சக்கரத்தாழ்வார் வழிபாடு 

விருச்சிகம்:  விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை

புதிய வாய்ப்புகளை தருகின்ற வாரம். வேலை தேடுவோருக்கு வேலை சிலருக்கு கிடைக்கும். மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும். உயர்கல்வி படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு சமூக சேவையில் நாட்டம் அதிகரிக்கும்.

பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு மருத்துவ செலவுகள் உண்டு. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உணவு பழக்கவழக்கத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். 

பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு

தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்

பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உடல்நலம் சீராகும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறு பாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் விருப்பத்தின்படி நடந்துகொள்வார் கள். அவர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்புண்டு. 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். வாரப் பிற்பகுதியில் அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.சகோதரர்களிடம் கேட்ட பண உதவி கிடைக்கும்.மாணவர்கள் பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகள் பெறுவார்கள்.

வழிபாடு: ஐயப்பன் வழிபாடு

மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்

வெளிநாட்டிலிருந்து ஏற்றுமதி இறக்குமதி தொழிலுக்கான அனுமதி பெறுவீர்கள். எதிர்பாராத வகையில் பண சேர்க்கை உண்டாகும். குடும்ப கவலை மறந்து மன நிம்மதி ஏற்படும்.எதிரிகள் பணிந்து நடப்பார்கள்.

பதவி உயர்வும் பாராட்டும் கிடைக்கும். பெற்றோர் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படலாம். மருத்துவ செலவு உண்டாகும். செலவுகள் கைமீறி போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம்‌ மாணவர்களுக்கு போட்டி தேர்வில் தேர்ச்சி அடைவார்கள்.

பரிகாரம்: முருகப்பெருமான் வழிபாடு

கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்

புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். ஆடை ஆபரண பிராப்தி உண்டாகும். ஏக்கத்தோடு இருந்தவர்களுக்கு மக்கள் பேறு உண்டாகும். தடைபட்ட காரியங்கள் கைகூடிவரும். பந்தயங்களில் அமோக வெற்றி கிடைக்கும். தள்ளிப்போன திருமணம் சிறப்பாக நடக்கும்.

பொருளாதாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். வெளியூர் பயணங்கள் நல்ல பலனைக் கொடுக்கும்.உறவினர்களால் பணச் செலவு அதிகரிக்கும். வழக்குகள் தொல்லையைக் கொடுக்கும்.வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும்.நல்ல நண்பர்களுடன் பழகுவது நல்லது. 

பரிகாரம்: ராஜராஜேஸ்வரி அம்பாள் வழிபாடு

மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உடல்நலம் சீராகும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறு பாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் விருப்பத்தின்படி நடந்துகொள்வார் கள். அவர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்புண்டு. 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். வாரப் பிற்பகுதியில் அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.சகோதரர்களிடம் கேட்ட பண உதவி கிடைக்கும்.மாணவர்கள் பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகள் பெறுவார்கள்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு

- 4தமிழ்மீடியாவுக்காக: ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார்

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :  +919941387054, +916380820592 . மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்