free website hit counter

'மஞ்ஞும்மெல் பாய்ஸ்' சிறந்த படமா ?

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இணையவெளியெங்கும் 'மஞ்ஞும்மெல் பாய்ஸ்" #manjummal_boys படம் பற்றிய பார்வைகள் நிறைந்து கிடக்கின்றன. பார்த்த பின் ஏதும் எழுதத் தோன்றவில்லை.

தமிழில் வெளிவந்த கோபி நைனாரின் 'அறம்' படத்தின் திரைக்கதை பேசிய  நேர்மை இந்த மலையாளப்படத்தில் இல்லை. ஆனால் அறம் படத்தில் காணப்பட்ட சில சினிமாத்தனங்கள் அதனை சினிமாவாகவே பதிவு செய்ய, அந்தச் சினிமாத்தனங்கள் அற்றதினால் ஒரு யதார்த்தப் படைப்பாக மக்களை உணர்வால் நெருங்குகிறது என்று சொல்லலாம். அதனால் மக்கள் கொண்டாடுகின்றார்கள்.

படைப்பாக்க வகையில் கொண்டாடப்பட வேண்டிய சினிமாதான்.  தவிர, மஞ்ஞும்மெல் பாய்ஸ் ஒரு மாற்றுச் சினிமாவோ, மாற்றந்தரும் சினிமாவோ அல்ல.  33 வருடங்களுக்கு முன்னர் தமிழில் வெளிவந்த,  மஞ்ஞும்மெல் பாய்ஸ் படத்திற்கு உந்துதலாக இருந்த " குணா" படம் இப்போது பார்த்தாலும், அதனைவிட உணர்வுகள் நிறைந்த, உளம் சார்ந்த  படமாகவே உள்ளது.

மலையாளச் சினிமாவுலகம், மாற்றுச் சினிமா, யதார்த்த சினிமா எனும் வகைகளில் பல படைப்புக்களை தந்திருப்பது மறுப்பதற்கில்லை. அன்மையில் நாம் பார்த்த மலையாள மாற்று சினிமாவாக இந்த ஆண்டு றொட்டாம் திரைப்படவிழாவில், ரைகர் பிரிவில் போட்டியிட்டு, இரு பெறுமதியான விருதுகள் பெற்ற, புதுமுக இயக்குனர்  மிதுன் முரளியின் "Kisswagon" ஐ சொல்லலாம். ஒரு அனிமேஷன் படத்தில் என்ன அரசியல் பேச முடியும் ? எனும் கேள்வியோடு படம் பார்க்கத் தொடங்கினால், அடுத்து வந்த இரண்டு மணிநேரத்தில் சினிமாவின் சட்டகங்களையெல்லாம் உடைத்தெறிந்து சமூக அரசியல் பேசியது அப்படம்.  ஹிந்திப்படமான, Vidhu Vinod Chopraவின் 12th Fail படம் பார்த்த பின்,  சினிமா நேர்த்தியும், நேர்மையும் மிகுந்த ஒரு திரை அனுபவத்தையும், அதையொட்டி எழும் சில கேள்விகளையும் பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்தியாவில் கொள்ளையர்களின் சாம்ராஜ்மாக அறியப்பட்ட சம்பல் பள்ளதாக்குப் பகுதியிலிருந்து, IPS என்றால் என்ன? அதன் அதிகார உச்சம் என்ன? என்பதே தெரியாத ஒரு இளைஞன், இரண்டு லட்சம் பேர் விண்ணப்பித்து, இறுதியில்  20, 25, பேர் மட்டுமே  தேர்வாகும் இறுதிப் பரீட்சையில் வெற்றிகண்டு, IPS அதிகாரியாகும், உண்மைக்கதையினை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் திரைக்கதை, நகரும் களத்திலெல்லாம், நம்பிக்கையையும், நேர்மையையும், உழைப்பையும், உண்மையையும் சுயமரியாதையையும், விதைத்துச் செல்கின்றது.

பிள்ளைகளுக்கு நேர்மை எனும் நெறியை வாழ்ந்து காட்டி உணர்த்தும் தந்தை, உணர்ந்து நடக்கும்  குடும்பம், இணையும் நட்பு, உதவும் உள்ளங்கள் எனும் நேர்மறை கதாபாத்திரங்கள், எதிர்மறையாகவும், எடுத்தெறிந்து அதிகாரம் காட்டும் கதாபாத்திரங்களின் முகத்தில்  செருப்பால் அடித்து மரியாதை செய்கின்றன. வளர்ந்த மகள், அதிகாரத்துக்கு வந்துவிட்ட போதும், உறவை உடைத்துவிடாது, தந்தையின் நம்பிக்கையை வென்றெடுக்க வீட்டிற்குள்ளிருந்து நியாயம் பேசுகின்றாள். நேர்மையான அதிகாரிகளும்,  நல்ல மனிதர்களும், உண்மையின் பக்கம் இருப்பார்கள் என்பதை, காதல், பாசம், பரிவு, நட்பு, பிரிவு, என எல்லாவித உணர்வுகளுடனும் வருகின்றனர். 

படத்தில், வெளிநாட்டு டூயட் இல்லை, குத்துப்பாட்டு இல்லை, சன்டை இல்லை, கத்தி இல்லை, இரத்தம் இல்லை, குறிப்பாக போதை இல்லை, புகையும் இல்லை. மாறாக அடர்வன மலைப்பிரதேசக் கிராமமும், தலைநகர் டெல்லியின் நெருக்கமான குடியிருப்புக்களும், சந்தைகளும், காட்சிக் களங்கள் ஆகின்றன. 

தமிழில் அத்தி பூத்தாற்போல் ' அயோத்தி ' 'ஜெய்பீம்'  'விடுதலை' போன்ற சில தரமான படங்கள் வந்திருப்பதைத் தவிர்த்து, பெரும்பாலும் வெற்றிப்படங்கள் என்றும், ஸ்டார் படங்களென்றும், கோடிகளில் வருமானம் பார்க்கும் தமிழ் நாயக நடிகர்களும், இயக்குனர்களும், பொய்களைப் புனைவாக்கி, போதைக் கும்பலையும், பழக்கத்தையும்,  குழு மோதல்களையும், தனிநபர் ஹீரோயிசத்தையும், மோதலையும், இரத்தம் தெறிக்க திரையில் காட்சிப்படுத்துகின்றார்கள். இதற்குச் சற்றும் குறைவில்லாததுதான் ஹிந்தித் திரையுலகமும். இவ்வாறான படைப்புக்கள் குறித்து, அவற்றின் படைப்பாளிகள் கூறும் நொன்டித்தனமான சாக்கு, சினிமா ஒரு வர்த்தகம். அதில் பார்வையாளர்களின் விருப்பத்தைக் கொடுத்தால்தான் வெற்றி காணலாம் என்பதே.  ஆனால் 12th Fail படம் வசூலிலும் வெற்றி பெற்றிருக்கிறது. 'மஞ்ஞும்மெல் பாய்ஸ்' படமும் வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால் உண்மை என்ன?. போதைப்பழக்கத்தை பொழுது போக்காகவும், அடிதடி சண்டையைக்  கலாச்சாரமாகவும், குடும்ப உறவுகளின் சிதைவு தவிர்க்க முடியதெனவும், பார்வையாளர்கள் மனதில் பதியம் போடும் பிரச்சாரத்தைப் பெரும் பணம் செலவழித்து, சமூகச் சீரழிவுக்கான பிரச்சாரம் செய்கின்றார்கள் எனச் சொல்லலாமா ?

12th Fail பட நாயகனின் வெற்றி உந்துதலுக்கான காரணி, அரசியல்,  சமூகம், என அனைத்தும் பிழையாகக் காணப்படும் சூழலில், ஒரு உண்மையான அதிகாரியின் நேர்மையான செயல்.   மோசமான அரசியற் சூழல்களையும் தாண்டி, தமிழகத்தின்   உயர்வுக்குக் காரணமாயிருப்பவர்கள்,  சகல துறைகளிலும் நேர்மையாகச் செயற்படும் அதிகாரிகள் என்பதே உண்மை. அவ்வாறான நேர்மையான அதிகாரிகளை  தமிழ்ச்சினிமாக்களில் பெரும்பாலும், சமூக விரோதிகளால் கொல்லப்படுவதாகவோ, தாக்கப்படுவதாகவோ,  காட்சிப்படுத்தி, சமூகப் பயத்தினை விதைக்கின்றார்கள் என்பதை மறுத்திட முடியுமா ? 

ஏன் இவ்வாறு செய்கின்றார்கள் ?

12th Fail படத்தின் நாயகன் தன் இறுதித் தேர்வின் போது, டாக்டர் அம்பேத்கார் சொன்ன  "Be Educated, Be Organised and Be Agitated" மேற்கோளினைக் குறிப்பிட்டு, அதிகாரம் செய்பவர்கள், மக்கள் அறிவாளிகளாவதை விரும்புவதில்லை எனச் சொல்வார். அதையே சினிமாவை வணிகம் எனச் சொல்லிப் படம் எடுப்பவர்கள் செய்கின்றார்கள். சினிமாவை சமூகப் பிரக்ஞை மிக்க ஒரு உன்னதமான கலைவடிவமாக மாற்றுவதற்கோ, சமூகப்பொறுப்புணர்வுடனோ, அவர்கள் நடந்து கொள்வதில்லை. 

தேர்வுகளில் தோல்வியுற்றவர்களுக்கும் நம்பிக்கையூட்டி, அதற்கான மாற்று வழியினையும், நேர்மையானதாகவே காட்டிப் படத்தினை நிறைவு செய்கின்றார் 12th Fail படத்தின் இயக்குனர் Vidhu Vinod Chopra. அந்த நம்பிக்கையை படம் பார்க்கும் ஒவ்வொருவரும் எடுத்துச் செல்வார்கள். 12th Fail சினிமா மாற்றுச் சினிமாவாக இல்லையென்று சொன்னால் கூட அது நம்பிக்கையளிக்கும் சினிமா.


- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

The film "Manjummal Boys" is receiving attention across the internet. After watching it, there seems to be nothing to write about.

The storyline of the Tamil movie "Aram" by director Gopi Nainar, which received significant attention for its social commentary, is not present in this Malayalam film. However, certain cinematic elements seen in "Aram" have been adapted into films and resonate with audiences, suggesting that films can engage people by portraying social realities. Therefore, the film that deserves celebration is one that resonates with people, whether it's a transformative cinema or not. Even though "Gunaa," which preceded "Manjummal Boys" by 33 years in Tamil cinema, does not possess the political discourse of "Aram," it stands as a deeply emotional and introspective film.

The Malayalam film industry presents various genres, including transformative cinema, mainstream cinema, and realistic cinema. Amidst the first film festival in Kerala held after 33 years, one can mention Mithun Murali's "Kisswagon." Can politics be discussed in an animated film? Starting to watch a movie like this leads to a cinematic discourse heavily influenced by societal and political contexts.

After watching Vidhu Vinod Chopra's film "12th Fail," the viewer is compelled to share certain questions and experiences that evoke deep introspection. In India, what does IPS stand for? What is the extent of its authority? These questions may arise from watching a film and could lead to discussions about cinema's role in depicting reality.

The success of "12th Fail" lies in the authentic portrayal of an IPS officer's journey from obscurity to success in the final examination. This narrative unfolds against the backdrop of corruption, politics, and societal challenges. The film underscores the importance of education, organization, and agitation, echoing the words of Dr. Ambedkar. Vidhu Vinod Chopra, the director, instills hope in those who have faced failures, showing them a path of authenticity and truthfulness in their pursuit of power.

The societal pressures depicted in the film are familiar to many families. Through characters and narratives, the film reflects the struggles and aspirations of ordinary people and the significance of integrity amidst power dynamics.

In Tamil cinema, films like "Ayoththi," "Jai beem," and "Viduthalai" have deviated from such portrayals, focusing instead on star-studded, high-grossing films driven by commercial interests. However, "12th Fail" and "Manjummal Boys" have managed to achieve commercial success while also delivering their respective messages.

The success of "12th Fail" is attributed to the director's commitment to portraying authentic figures of authority, even in a flawed political and social environment. The genuine efforts of responsible figures across all sectors form the cornerstone of this film's narrative, demonstrating their dedication to truth, integrity, and service.

The societal impact of cinema, its ability to evoke emotions and challenge social norms, reflects its potential as a medium for change. Therefore, the creators of cinema, by showcasing authentic figures of authority, contribute to societal discourse and inspire hope among audiences.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula