free website hit counter

நத்தார் எங்கிருந்து  தொடங்கியது ?

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நத்தார் என்பது கிறிஸ்தவ மதத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும். "நத்தார்" என்ற தமிழ் வார்த்தை, "நற்றேர்" அல்லது "நற்காலம்" என்பதிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. இதற்கு "நல்ல நேரம்" அல்லது "திருநாள்" என்று பொருள் சொல்வதும் உண்டு.

ஆங்கிலத்தில் இதனை "Christmas" என அழைக்கின்றார்கள். இது "Christ's Mass" என்பதிலிருந்து தோன்றியதாகும். ஆனால் நத்தார் என்பதனை ' பிறப்பு' எனும் சொல்வழக்கில் ஆராய்ந்தால், nativitas லத்தீன் மொழிச் சொல்லடியில் இருந்து பிறந்ததாகச் சொல்லலாம். இதே சொல் வழக்கிலேதான்  இத்தாலிய மொழியில் Natale என்றும், பிற ஐரோப்பிய மொழிகளில் சிலவற்றில் இதே தொனியிலும் அழைக்கப்படுகிறது.

நத்தாரின் ஆரம்பம், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருகிறது. அதனால்தான் இப் பண்டிகைக் காலத்தைப் பாலன்பிறப்பு எனவும் கொண்டாடுகின்றார்கள்.  முதலாவது நத்தார் கொண்டாட்டம் எப்போது தொடங்கியது என்பதைச் சரியாக கூற முடியவில்லை, ஆனால் கிபி 4ஆம் நூற்றாண்டில் (AD) இது ஐரோப்பாவில் பரவலாகக் கொண்டாடப்பட்டதாக அறியப்படுகிறது.

இயேசு கிறிஸ்து உண்மையில் டிசம்பர் 25ல் பிறந்தார் என்பதில் பல முரண்களும் உள்ளதாக கருதப்படுகிறது. ​வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து, இயேசு குளிர்காலத்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்பதாகும். பைபிளின் வாசகங்களில், இயேசு பிறந்த இரவில் மேய்ப்பர்கள்  வயல்வெளியில் தங்கியிருந்தனர் (லூக்கா 2:8)என்றுள்ளது. ஆனால் பெத்லகேமில் டிசம்பர் மாதம் கடும் குளிரும் மழையும் நிறைந்த காலம் என்பதால், ஆடுகளை மேய்யபர்கள் வெளியே வயல் வெளியில் வைத்திருப்பது சாத்தியமில்லை. ஆகையினால் இயேசு அநேகமாக வசந்த காலத்திலோ (Spring) அல்லது இலையுதிர் காலத்திலோ (Autumn) பிறந்திருக்கலாம்.  கிறிஸ்தவ திருச்சபைகள் இயேசுவின் பிறந்த நாளை பின்னர் டிசம்பர் 25-ஆக அறிவித்திருக்கலாம்.  இது முன்னர் ரோம அரசு கொண்டாடிய "சூரியனின் பிறப்பு" (Sol Invictus) என்ற பண்டிகைக்கு இணையாக இருந்தது.

நத்தார் பண்டிகை கிறிஸ்தவ மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஆரம்பித்தபோது, குறிப்பாக பாலன் பிறப்புகதைகள் (nativity scenes) தேவாலயங்களில் இசை மற்றும் பிரார்த்தனை என்ற வகையில் ஆரம்பமாகின. இன்று நத்தார் பல நாட்டு மரபுகள் சேர்ந்து  உலகளாவிய சுதந்திரம்அன்பும் அமைதி, என ஒரு உலகளாவிய பண்டிகையாக மாறியுள்ளது. அதன் வடிவமும்,  மின் விளக்கு அலங்காரங்கள், கிறிஸ்துமஸ் மரம், பரிசுகள், மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுடன் மகிழ்ச்சிகரமாக கொண்டாடப்படும் பண்டிகையாக மாறியுள்ளது.

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula