பன்றித்தலைச்சி அம்மன் கோவிலையும், பூநகரிப்பாலத்தையும், வானிலிருந்து பார்க்கும் அழகு தோற்றங்களும், பசுமை வயல்களும் நிறைந்த காட்சி அமைப்போடு வந்திருக்கிறது சூப்பர் சிங்கர் சின்மயி சிவகுமாரின் புதிய பாடலான அள்ளித்தந்த பூமி.
முதலில் சின்மயியைப் பற்றிச் சொல்லி விடுகின்றேன். இசையின் எல்லா வகை மாதிரிகளையும், சிறப்பாகப் பாடக் கூடிய, ஆர்ப்பாட்டமில்லாத எங்கள் மண் தந்த பாடகியாக உருவாகி வருகிறாள் இந்தச் சின்னப் பெண். அவளது அமைதியான இந்த வளர்ச்சியும், பொறுப்புணர்வும் அவள் பெற்றோர் வழி வந்தமைந்திருக்க வேண்டும். அந்த அமைதி இந்தப்பாடலின் ஆத்மாவாகிறது. ஒரு காலைப் பொழுதில் ரசித்துக் கேட்கக் கூடிய சுகானுபவத்தைத் தருகிறது சின்மயின் அமைதியான, வார்த்தைகளை விழுங்கித் தொலைக்காத அழகான உச்சரிப்புடன் கூடிய குரல்.
அந்தக் குரலுக்கும், வரிகளுக்கும் வாகான இசையை வழங்குகிறது சதாகரனின் இசைமெட்டு. அதனை அழகான இசைச்சரமாகத் தொடுத்துவிடுகிறார் மாரிஸ் விஜய். கட்புலத்தை உறுத்தாத ஒளியமைப்பும், காட்சிகளும், கனடாவிலும், தாய் மண்ணிலுமாக மாறிமாறிப் பயனிக்கும் காட்சித் தொகுப்பும், கண்களுக்கு பசுமை விருந்தளிக்கின்றன.
தாயகத்தின் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தும் வரிகள். தாயகப் பாடல் என்றாலே போரின் துயரங்களை பாடும் நிலைகடந்து, மண்ணின் பசுமை பேசும் மனதுக்கு உகந்த வரிகளை வடித்திருக்கிறார் வைர பாரதி. அதற்காக உணர்ச்சிக் கதறலாக இல்லாது, கவித்துவமாக தாயத்தின் நினைவு பேசும் அழகான வரிகளுடனும், கச்சிதமான காட்சியமைப்புக்களுடனும், தாய் மண்ணின் நினைவு பேசும், பாடலாக வந்திருக்கும் இந்தப் படைப்பினைத் தயாரித்திருக்கிறார்கள் தென்மாராட்சி அபிவிருத்தி அமைப்பினர். பாராட்டத்தக்க முயற்சி.
சிறப்பான இந்த முயற்சியைப் பாராட்டுதலும், பகிர்தலுமே, படைப்பாளர்களுக்கு நாம் வழக்கும் கௌரவும். அழகிய இந்தப் படைப்புக்கு நாம் அனைவரும் அதனைத் தயங்காமற் செய்யலாம்.
- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்
பங்காற்றியிருக்கும் கலைஞர்கள்:
Singer : Sinmaye Sivakumar
Music : K Suthakaran 
Music Producer : Maris Vijay
Lyrics : Vaira Bharathi
English Lyrics: Maris Vijay
Co-singers: Georginaa Mathew & Balaji Sri 
Keys & Vocal Arrangements: Maris Vijay 
Rhythm : Aneesh Soloman .
Indian Live Percussion: Naveen & David 
Flute : Sarath 
Guitar : Mark 
Sinmaye voice recorded @James Studio Canada by Sutharsan Christian 
M-Choir , Vocals & Instruments recorded @ Trinity Waves Chennai by Maris Vijay 
Guitar Recorded @ Sound Mix Mumbai India by Akshay
Sound Design Pre mix :Maris Vijay 
Mix and Mastered By Siva Kumar @ Trinity Waves
MFiT : Maris Vijay
Videography & Editing: Selfie moment of event by Senthuran Shanmugarajah 
Dance Choreography: Bhaarati school of Indian Classical Dance 
by Smt. Shiyama Thayaalan.
Dancers: Abina Ravikanthan ,
Sambavi Gunarajah ,
Saruka Varatharajan,
 Sarmiya Vaseekharan.
Outfit: Debonair designers Thanusha Chandrasekaram.
MUAH: Simple beauty by Rajany Sivarajah
Sri Lanka Videography Credits: Maxim Foto
																						
     
     
    