பீகாரின் 'சைக்கிள் பெண்' ஜோதி தந்தையை பறிகொடுத்தார் !
இந்தப் படத்தையும், 15 வயதான ஜோதி என்கின்ற இந்தப் பெண்ணையும் அவ்வளவு எளிதாக நீங்கள் மறந்திருக்க முடியாது. கடந்த ஆண்டு, இந்திய ஒன்றிய அரசால் திடீரென்று அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய லாக்டவுன் பல அசலான கதாநாயகிகளையும் கதாநாயகர்களையும் உலகுக்கு அடையாளம் காட்டியது. அவ்விதம் உலகுக்கு அறிமுகமானவள்தான் இந்தப் பெண்.