ஹிப் ஹாப் ஆதியின் ‘தீ வீரன்’ ஆவணப்படம் !
தமிழ் சினிமாவில் பன்முக திறமையாளராக தன்னை வெளிப்படுத்திவரும் நடிகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இந்த கோவிட் 19 நோய்தொற்று காலத்தில், மக்களுக்காக உழைத்திட்ட, தமிழ்நாடு தீயணைப்பு துறை காவலர்களின் அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு, ‘தீ வீரன்’ எனும் ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.