சூப்பர் ஓவரும் டை ஆன நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியாக இங்கிலாந்து மகுடம் சூடியது!
இன்று ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்வருடத்துக்கான ஐசிசி உலகக் கிண்ணக் கோப்பைப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்றிருந்த நிலையில் சூப்பர் ஓவர் வழங்கப் பட்டு அதிலும் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்ற நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.