free website hit counter

2024 ஐரோப்பிய திரைவிழாக்களில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் 

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நயன்தரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில், "கூழாங்கல்" திரைப்பட வெற்றியின் பின்னர்,  ஐரோப்பிய திரைப்பட விழாக்கள் குறித்து உங்களுக்கு கொஞ்சம் அதிகம் தெரியவந்திருக்கலாம்.

இம்முறை 2024 இன் தொடக்கத்தில் ஐரோப்பிய திரைப்பட விழாக்களில் மிளிரும் இந்திய தமிழ்த் திரைப்படங்கள், மலையாளத் திரைப்படம் மற்றும் ஒரு மலேசிய தமிழ்த் திரைப்படம் குறித்து இக்கட்டுரை அலசுகிறது.  

கொட்டுக்காளி (The Adamant Girl) : Berlin 

கூழாங்கல் வெற்றிக்கு பின்னர் P.S.வினோத்ராஜ் இன் அடுத்த திரைப்படம். இம் முறை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது தயரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்திக்கிறார். "அண்ணே, பேர்லினுக்கு தெரிவாகியிருக்கிறதண்ணே! என வினோத்ராஜ் தொலைபேசியில் சொல்ல, « அப்படியா ரொம்ப சந்தோஷம் " என சுமாராக சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்துவிட்டாராம். பேர்லின் எவ்வளவு பெரிய திரைப்பட விழா என்பது அதுவரை தனக்கு தெரிந்திருக்கவில்லையாம். கொஞ்சம் கொஞ்சமாக அதை பற்றி கேள்விப்பட கேள்விப்படத்தான் அதன் பூரிப்பும், பெருமையும் தனக்கு தெரிந்தது என்கிறார். 

பேர்லின் Forum பிரிவில் world premiere ஆக முதன்முறையாக காட்சிப்படுத்தப்படும் தமிழ் திரைப்படம் எனும் பெருமையும் இது பெற்றிருக்கிறது. 

மலையாளத் திரைப்படம் Kumbalangi Nights இல் கதாநாயகியாக தன் இயல்பான நடிப்பில் கட்டிப்போட்ட Anna Ben தான் இத்திரைப்படத்திலும் நாயகயாக வலம் வந்திருக்கிறார். " விடுதலை " இலிருந்து குணச்சித்திர நடிகராக உருவெடுத்துள்ள சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பெண் சமத்துவத்தையும், ஜாதிக்கொடுமையையும் மையப்படுத்தி வினோத் ராஜ் மறுபடியும் எடுத்திருக்கும் கதை. 

https://www.berlinale.de/de/2024/programm/202404155.html

IFFR 2024

Roterdam திரைப்பட விழா. தமிழக இயக்குனர்கள் வெற்றிமாறன், ராம் முதற்கொண்டு பலரை ஐரோப்பிய திரை மேடைகளுக்கு அறிமுகப்படுத்திய திரைப்பட விழா. அது காமர்ஷியல்களாக இருக்கலாம், அல்லது art house திரைப்படங்களாக இருக்கலாம். இத்திரைப்படவிழாவில் தமிழ் சினிமாவுக்கு பஞ்சமிருக்காது.

இங்குதான் கூழாங்கல் tiger விருதை வென்றது. கடந்த வருடம் இலங்கைத் தமிழ், சிங்கள திரைப்படமான "மணல் " விருதை வென்றது. 

இம்முறை பல்வேறு பிரிவுகளில் 15 இந்திய திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அதில் தமிழில் இரு காமர்ஷியல் திரைப்படங்கள் : ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் விடுதலை I, II. ஆனால் உற்சாகம் அதிகமாக இருப்பது, போட்டிப் பிரிவில் இருக்கும், இதுவரை வெளிவராத இரண்டு திரைப்படங்கள். 

முதலாவது, "ஏழுமலை, ஏழுகடல்" (Seven Seas Seven Hills). இயக்குனர் ராமின் ஐந்தாவது திரைப்படம்.  யுவன் சங்கர் ராஜாவின் இசையில், நிவின் போலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் ஒரு மழைக்கால இரவில் ரயிலில் நடைபெறும் ஒரு கதை.  ஒரு ஆடவன், 8000 வருடங்களாய் இறப்பற்று வாழும் ஒரு ஜீவன் மற்றும் ஒரு எலி, ஆகியவற்றுக்கு இடையில் நடக்கும் ஒரு சந்திப்பு. 

Big Screen போட்டிப்பிரிவில் ஏனைய படங்களுடன் போட்டியிடுகிறது இத்திரைப்படம். 

https://iffr.com/en/iffr/2024/films/seven-seas-seven-hills

அதோடு Bright Future பிரிவில் இயக்குனர் அவினேஷ் பிரகாஷின் "நாங்கள் " எனும் படம் போட்டியிடுகிறது. இதன் மொத்த நீளம் 259 நிமிடங்கள். மூன்று சிறுவர்களையும், அவர்களது தந்தையையும், அவர்களது மலைக்கிராமத்தின் வீட்டையும் ஒட்டி 1900 களில் நடக்கும் ஒரு திரைக்கதை. 

https://iffr.com/en/iffr/2024/films/naangal

புதிய திரைப்பாணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிராதன போட்டிப் பிரிவான Tiger பிரிவில், Kisswagon போட்டியிடுகிறது.  மலையாள இயக்குனர் மிதுன் முரளியின் 173 நிமிடக் கதை இது. அனிமேஷன், ஒலி, நிழலாட்ட வடிவங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் திரில்லர். 

https://iffr.com/en/iffr/2024/films/kiss-wagon

கடைசியாக Harbour பிரிவில் போட்டியிடும் ஒரு மலேசிய தமிழ்த் திரைப்படத்தை சொல்லவேண்டும். தனது " ஜகாத் "  திரைப்படத்திற்காக 2015 இல், மலேசிய சினிமா விருதுகளை வென்ற முதல் தமிழ் இயக்குனரான சன் ஜே பெருமாளின் அடுத்த திரைப்படம்.

தென்னிந்திய காமர்ஷியல் திரை மோகத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு அல்லது ஈர்க்கப்பட்டு, தனக்கான தனித்துவ சினிமா பாணிகளை இன்னமும் திடமாக உருவாக்க முடியாத மலேசிய தமிழர்களை ஒட்டிய கதை , "நீர் மேல் நெருப்பு" (Fire On Water). தோற்கும் விளிம்பில் நிற்கும் ஒரு இளம் திரைப்படவியலாளனை பற்றிய மெலோ டிராமா வகை கதை. 

https://iffr.com/en/iffr/2024/films/fire-on-water

எதிர்வரும் ஜனவரி கடைசி - பெப்ரவரி முதல் வாரங்களில் நீங்கள் Rotterdam அருகாமையிலிருந்தால் இத்திரைப்படங்கள் யாவும் உங்கள் கவனத்திற்கு. 

 

- 4தமிழ்மீடியாவிற்காக: ஸாரா 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula