free website hit counter

இத்தாலியில் ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம் !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இத்தாலியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல மக்கள் போராட்டங்கள் நடந்துள்ளன.

இத்தாலியின் அமைதி மற்றும் நிராயுதபாணியாக்க நெட்வொர்க், தொழிற்சங்கங்களான Cgil, Cisl, Uil மற்றும் பிற அமைப்புகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் பல, இந்த வார இறுதியில் இத்தாலியின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுள்ளன.ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலங்கள் மற்றும் அமைதியான போராட்டங்களில் கலந்துகொண்டு கண்டனங்களைக் கோஷங்களாக குரலெழுப்பி, இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தினர்.

மத்திய ரோமில் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் அழைப்புக்கு 1,000க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்துகொண்னர். "போருக்கு எதிராக" என்ற வார்த்தைகளைத் தாங்கிய மேடையைச் சுற்றி வளைத்து, அமைதியின் வானவில் வண்ணக் கொடிகளை பறக்கவிட்டனர்.

வெள்ளிக்கிழமை மாலை இத்தாலிய தலைநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான கொலோசியத்திற்கு உக்ரைனுக்கு ஆதரவான பதாகைகள் மற்றும் செய்திகளை ஏந்தியபடி கூட்டத்தினர் ஒன்றாக நடந்தனர்.

இந்த ஊர்வலங்களில், ரஷ்ய அதிபர் புட்டின் முக்கிய இலக்காக இருந்தார். பதாகைகள் பலவும் அவரை இரத்தக்கறை படிந்த கைகளுடன் கொலையாளி என்று கேலிச்சித்திரம் செய்து அவரை நாஜி சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லருடன் ஒப்பிட்டனர். புடினின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்த எதிர்ப்பாளர்களுடன், மிலானோவிலும் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

இத்தாலியின் பிரதம மந்திரி Mario Draghi உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky உடன் சனிக்கிழமை பேசினார், "ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் வழியை இத்தாலி முழுமையாக ஆதரிக்கிறது மற்றும் தொடர்ந்து ஆதரிக்கும்" என்று அரசாங்கம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

இதற்கிடையில், போப் பிரான்சிஸ், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக ஏற்பட்ட “துயர்கரமான நிகழ்வுகளுக்கு ஆழ்ந்த வேதனையை” ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் நடத்திய அழைப்பின் போது வெளிப்படுத்தினார் என்று வாடிகனுக்கான கெய்வ் தூதரகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

புனித பாப்பரசர் வெள்ளிக்கிழமை ரஷ்ய உட்பட பல மொழிகளில் " அனைத்து போரையும் அவமானகரமான சரணாகதி" என்று கண்டித்து ட்வீட் செய்தார். அவர் மேலும் "ஒவ்வொரு போரும் நம் உலகத்தை முன்பு இருந்ததை விட மோசமாக்குகிறது. போர் என்பது அரசியல் மற்றும் மனித நேயத்தின் தோல்வி,” என்று 2020 இல் வெளியிடப்பட்ட அமைதி பற்றிய தனது கலைக்களஞ்சியத்தை மேற்கோள் காட்டினார்.

இதேவேளை ரஷ்ய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூட இத்தாலி தயாராகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction